வாழ்வியற் குறட்டாழிசை. 18 (செயல் உறுதி.)

Art by Vetha

செயல் உறுதி

ஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.

ன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.

ட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்

டம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.

டலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.

முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.

ன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.

நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.

நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.

கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.

சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.

சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.

க்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ் டென்மார்க்.
7-11-2011.

 

In Anthimaalai web site:-    http://www.anthimaalai.blogspot.com/2012/01/18.html

  

                             

 
 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jramanujam
  நவ் 07, 2011 @ 06:03:05

  செயல் உறுதி பற்றி–இங்கே
  செப்பிய அனைத்தும் தஞ்சை
  வயல்தனில் விளைந்த நெல்லே-வரி
  வடிவினில் வந்த சொல்லே

  நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 17:52:58

   மிக்க நன்றி ஐயா. உங்கள் இனிய வருகைக்கும், வரிகளுக்கும் மிக மிக மகிழ்ந்தேன். மகுந்த நன்றியும் கூறுகீறேன் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. நாஞ்சில் மனோ
  நவ் 07, 2011 @ 06:18:17

  அசத்தலான சூப்பர் கவிதை வாழ்த்துக்கள்….!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 22:08:46

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உங்கள இனிய வரவிற்கும், கருத்திடலுக்கும். இறைவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. மழை
  நவ் 07, 2011 @ 06:42:30

  செயல் உறுதி நன்று:)

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 22:11:12

   மழை போல வந்த கருத்துச் சாரலிற்கும், வரவிற்கும் மனம் மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. cpsenthilkumar
  நவ் 07, 2011 @ 07:12:11

  ரசித்தது -உடலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
  இயல்பாகக் கடத்தப் படுகிறது.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 22:13:16

   உங்கள் ரசிப்புத் தன்மைக்கும், வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக மகிழ்ந்தேன். நன்றியும் கூட. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ரெவெரி
  நவ் 07, 2011 @ 14:03:40

  இது மீள் பதிவு அல்லவே..சகோதரி…வாசித்தாய் நினைவு…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 22:15:48

   இல்லையே புத்தம் புதிய பதிவு.18ம் அங்கம். மீள் பதிவு அல்ல. கருத்திடலிற்கும், வலை விஐயத்திற்கும் மிக்க நன்றியும், மிகழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. மகேந்திரன்
  நவ் 07, 2011 @ 17:48:46

  அருமையான வாழ்வியல் குறட்பாக்கள்..
  அதிலும்

  //இடம், பொருள், ஏவல், காலம்
  அறிந்த செயலே உறுதியாகும்.//

  எனக்கு மிகவும் பிடித்த குறள் இது.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 07, 2011 @ 22:18:10

   மிக மகிழ்ச்சி மகேந்திரன். வந்து தந்த பின்னூட்டத்திற்கும், மிகுந்த நன்றி. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. பழனிவேல்
  நவ் 08, 2011 @ 05:38:10

  அனைத்தும் அனுபவ குறலோவியம்…
  அதிலும்,

  “நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
  செயலிற்கு உறுதி தரும்.”
  மிக அருமை …

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 08, 2011 @ 07:56:27

   உண்மை, அனைத்தும் அனுபவக் குறளோவியம்.மிக்க நன்றி சகோதரா உங்கள்இனிய வருகைக்கும் அன்பான கருத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. சத்ரியன்
  நவ் 08, 2011 @ 12:10:55

  மீண்டுமொரு அருமையான , அவசியமான பதிவு. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 9. Vetha ELangathilakam
  நவ் 08, 2011 @ 15:52:59

  மிக்க நன்றி சகோதரா. உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 10. rathnavel
  நவ் 10, 2011 @ 00:13:56

  அழகு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  நவ் 10, 2011 @ 04:47:33

  உண்மைதான். கவிதை அருமை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   நவ் 10, 2011 @ 21:50:20

   மிக்க நன்றி சகோதரா உங்கள் வருகை வலைப்பதிவிற்கு மிக மகிழ்ச்சி தந்தது. கருத்திடலிற்கும் மிக்க நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. கோவை கவி
  ஜன 27, 2012 @ 07:41:32

  புலவர் சா இராமாநுசம் சொன்னது…
  கருத்துக்கள் அருமை!
  வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  1/27/2012 7:41 AM

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: