29. இயக்கும் புதுச் சக்தியாக…(பா மாலிகை (காதல்)

 

இயக்கும் புதுச் சக்தியாக…

 

விழி மொழி வீசிய கதிர்
வழி – களி கொண்ட புதிர்
மொழி – தந்தது சல்லாபச் சதிர்.
அழிந்தது இதயம் மூடிய கூதிர்.

ளமையாம் இனிய தேவகோட்டை
வளமை தருமொரு ராஜபாட்டை.
களமது காதற் கனவுக் கோட்டை.
உளமே தினம் மறக்கும் வீட்டை.

லராத பூவாய் விரியும்
மனம், மணப்பதில்லை, பரிவில்
தினம் தானே சிரிக்கும்.
கனமற்ற காதல் விரிப்பு.

யக்கம் புது மயக்கம்.
வியக்கும் நிலை இயக்கும்.
இலயிக்கும் நிலையிது உவக்கும்.
நயக்கும் காதலெனும் முயக்கமே.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-11-2011.

(முயக்கம் -தழுவுதல்,     கூதிர்- பனக்காற்று, குளிர்.)

 

                           

 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. jayaram
    நவ் 13, 2011 @ 07:06:46

    இளமையாம் இனிய தேவகோட்டை
    வளமை தருமொரு ராஜபாட்டை.
    களமது காதற் கனவுக் கோட்டை.
    உளமே தினம் மறக்கும் வீட்டை.

    kavithai super:)

    மறுமொழி

    • கோவை கவி
      நவ் 13, 2011 @ 08:40:47

      மிக்க நன்றி சகோதரா! மிக்க மகிழ்ச்சியுமடைந்தேன் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். நன்றி. நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. rathnavel
    நவ் 13, 2011 @ 13:39:40

    அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    மறுமொழி

  3. முனைவென்றி நா சுரேஷ்குமார்
    நவ் 14, 2011 @ 04:01:54

    சந்தநடை அருமை.

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 27, 2011 @ 09:28:51

      மிக்க நன்றி சகோதரா. 2 கிழமைக்கு மேல் சிறு இடைவேளை எடுத்தது. மெயில்கள் இன்று தான் பார்க்கிறேன். உமது கருத்திற்கும், வரவிற்கும் மிக நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  4. பழனிவேல்
    நவ் 14, 2011 @ 04:41:24

    “தயக்கம் புது மயக்கம்.
    வியக்கும் நிலை இயக்கும்.
    இலயிக்கும் நிலையிது உவக்கும்.
    நயக்கும் காதலெனும் முயக்கமே.”

    வரிகள் மிக அருமை…

    அதிலும், தலைப்பு மிக மிக அருமை…

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 27, 2011 @ 10:02:41

      மிக மகிழ்ச்சி சகோதரா. உங்கள் ஊக்குவிப்பு புது சக்தி தருவதன்றோ. இப்படியும் இடையிடை எழுத விருப்பம் சந்தக் கவிதையாக…கொஞ்சம் மரபுப் பாணியாக. (சிறு இடைவேளையின் பின்பு இன்று தொடர்கிறேன்) கருத்திற்கும், வரவிற்கும், மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  5. Kalai Moon
    நவ் 16, 2011 @ 05:25:57

    தயக்கம் புது மயக்கம்.
    வியக்கும் நிலை இயக்கும்.
    இலயிக்கும் நிலையிது உவக்கும்.
    நயக்கும் காதலெனும் முயக்கமே.

    காதலின் நிலையை சொல்லி
    கவிதைக்குள் ஒரு மயக்கத்தை
    தந்த கவிதாரனிக்கு வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  6. Kowsy
    நவ் 18, 2011 @ 19:59:16

    சீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் உங்களை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள்.

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 27, 2011 @ 18:37:10

      நன்றி தொடர் இடுகை அழைப்பிற்கு. 27ம் திகதி தான் பதிவிட்ட தகவலைப் பார்க்க முடிந்தது. எழுதுவேனோ தெரியவில்லை. இப்போதைக்கு ஆர்வமில்லை, பார்ப்போம்.

      மறுமொழி

  7. பிரபுவின்
    நவ் 20, 2011 @ 07:33:42

    அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்.

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 27, 2011 @ 18:39:52

      மிக்க நன்றி பிரபு. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும். இன்று தான் பார்க்கக் கிடைத்தது. இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  8. Peruntha Pia Ramalingam
    நவ் 27, 2011 @ 13:21:38

    Your poem is beautiful.

    மறுமொழி

  9. மகேந்திரன்
    நவ் 28, 2011 @ 08:04:03

    இதய ஓட்டத்தின் இயக்க ஆற்றலை
    அழகுபட கவியாக்கியமை
    மனதை அள்ளுகிறது சகோதரி…

    மறுமொழி

  10. ஒப்பிலான் மு.பாலு
    நவ் 28, 2011 @ 16:16:24

    //மலராத பூவாய் விரியும்
    மனம், மணப்பதில்லை, பரிவில்
    தினம் தானே சிரிக்கும்.
    கனமற்ற காதல் விரிப்பு.//

    காதல் ..மனத்தின் வெளிப்பாடு அருமை சகோதரி !

    மறுமொழி

  11. முனைவர் இரா.குணசீலன்
    நவ் 29, 2011 @ 06:22:39

    பாவாக்கம் மிக நன்று

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 29, 2011 @ 18:24:03

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    டிசம்பர் 01, 2011 @ 11:11:44

    மிக அருமை.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக