19. இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

(அனுபவக் குறிப்பு:- 7-3.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் ” ஓடிவிளையாடு பாப்பா”வில் காலையில் இடம் பெறும் அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

எனது வேலையிடத்தில் பிள்ளைகளைக் கொண்டு வந்து விடும் பெற்றோர், திரும்பிப் போகும் போது பிரியும் விடை கொடுப்பது என்பது சில பிள்ளைகளுக்கு மிகக் கஷ்டமான ஒரு விடயம். அழுவார்கள், பெற்றோரைக் கட்டிப் பிடித்தபடி அடம் பிடிப்பார்கள்.

சில பெற்றோர்கள் பிள்ளைகளைப் படம் வரைய, லீகோ கட்டைகளை அடுக்கி விளையாட என்று ஏதாவது ஒரு நடவடிக்கையில் புக விட்டு விடை பெறுவார்கள். அதாவது மகிழ்வோடு விடை பெறுவார்கள்.

இதில் இரண்டு பெற்றோர்கள் மிக சுறு சுறுப்பாக வருவார்கள். இவர்களது பெண் பிள்ளைகள் இன்னும் 4, 5 மாதத்தில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர உள்ளனர்.

 
இவர்கள் பாலர் நிலையத்திற்கு வந்தவுடன் பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ புத்தக அடுக்கிலிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, பிள்ளையை மடியில் இருத்தி புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைக்கும் விளங்கும். 3 -4 பக்கங்கள், அல்லது ஒரு கதை என வாசித்த பின் மகிழ்வாக விடை பெறுவார்கள்.

 

இது நாள் தோறும் காலையில் நடக்கும். 24 பிள்ளைகளில் 2 பெற்றோர் தொடர்ந்து இப்படிச் செய்கிறார்கள். இந்தப் பெற்றோர் நல்ல படிப்பு, உத்தியோகம் என்று நல்ல நிலையில் உள்ளவர்கள்.

என்னை இது மிகவும் ஈர்த்தது.

எமது தமிழ்த் தாய்மார் இப்படி நடக்கிறார்களா?

இப்படிப் புத்தகம் வாசிப்பார்களா?

என்று பல கேள்விகளை எனக்குள் கேட்கிறேன்.

இப்படிச் சிறு வயதிலேயே இவர்கள் (டெனிஸ் மக்கள்) வாசிப்புத் தொடங்குகிறது. வாசிகசாலைக்குச் சென்று கட்டுக் கட்டாகப் புத்தகங்கள் கொண்டு வந்து வயது வித்தியாசமின்றி வாசிப்பார்கள்.

நாங்கள் புத்தகங்கள் செய்தால், கையில் வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பித் தரும் எம்மவர்களும் உள்ளனர். (3 புத்தகங்கள் செய்து பெற்ற அனுபவம்)

இந்த அனுபவம் ஒருவரையாவது வாசிக்கப் பண்ணினால் அது எனது வெற்றி,  உங்கள் ஒளிமய எதிர்காலமுமாகும். நல்லதிஷ்டம் கிட்டட்டும்

(எனது புத்தகங்கள் பற்றிய தகவல்கள் – எனது புத்தகங்கள் – என்ற தலைப்பின் கீழ் வலையில் உள்ளது . விரும்பியவர்கள் வாசிக்கலாம். உங்களிடமிருந்து கேள்விகள் , மின்னஞ்சல்கள் வர முதல் நானே அத் தகவலைத் தந்துள்ளேன்.)

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-3-2005.

 

                             

 

28 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. arulmozhisrinievasan
    டிசம்பர் 19, 2011 @ 08:07:41

    இவர்கள் பாலர் நிலையத்திற்கு வந்தவுடன் பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ புத்தக அடுக்கிலிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, பிள்ளையை மடியில் இருத்தி புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைக்கும் விளங்கும். 3 -4 பக்கங்கள், அல்லது ஒரு கதை என வாசித்த பின் மகிழ்வாக விடை பெறுவார்கள். //// நல்ல பழக்கம் அணைவரும் கடைபிடிக்க வேண்டிய பழக்கம்

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      டிசம்பர் 19, 2011 @ 08:56:59

      உண்மை தான்! அப்போது தானே வாசிப்பின் உயர்வை சிறு வயதிலிருந்தே அறிய முடிகிறது. வளர்ந்த பின் கம்பைக் கையிலெடுத்து வாசி வாசி என்றால் புரியவா போகிறது! உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்

      மறுமொழி

  2. ramani
    டிசம்பர் 19, 2011 @ 11:52:05

    அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
    குட்டி யானையை இரும்புச் சங்கிலியில் கட்டிப் பழகினால்
    பெரிய யானையை சரடில் கட்டினால் போதும் என்பார்கள்
    சிறுவயதில் நாம் எப்படிப் பழக்குகிறோமோ
    அப்படித்தான் பெரியவர்கள் ஆனதும் நிலைக்கிறார்கள்
    சிந்தனையைத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    மறுமொழி

  3. மகேந்திரன்
    டிசம்பர் 19, 2011 @ 16:41:19

    வாசிப்பு என்பது மூளையைத் தூண்டிவிடும் செயல்.
    நீ வாசித்த புத்தகங்களை சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்.
    என்று ஒரு அறிஞர் சொல்கிறார். புத்தகங்களின் தாக்கம் நம் வாழ்வில்
    ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும். இன்று குழந்தைகள் மட்டுமல்ல
    ஆண்டு வாசித்துப் பழகிய பெரியோரும் வாசிப்பை மறந்தே போய்விட்டனர்.

    நான் இன்றும் என் குழந்தைகளின் பிறந்த நாட்களிலும் சரி, மற்ற குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு சென்றாலும் சரி அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக கொடுப்பதை உறுதியா கொண்டுள்ளேன். என்றாவது ஒருநாள் படிப்பார்கள் என்ற எண்ணத்தில்.

    நிச்சயம் உங்கள் புத்தகங்களை படிக்கிறேன் சகோதரி.

    மறுமொழி

  4. SUJATHA
    டிசம்பர் 19, 2011 @ 19:06:33

    அருமை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிறைந்த அறிவைப்பெறுகின்றனர். அதுமட்டுமல்ல நீங்கள் சிறுபிள்ளைகளுடன் கற்பித்த முறையை அழகாக எடுத்து உரைத்தமை அடுத்தவர்க்கும் எடுத்துக்காட்டு..தொடர்க பணிகள்!!!

    மறுமொழி

  5. வே.நடனசபாபதி
    டிசம்பர் 20, 2011 @ 01:51:14

    இளம் பெற்றோர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நல்ல பழக்கங்களை தந்தமைக்கு நன்றி. ஆனால் இயந்திரமயமாகிவிட்ட இவ்வுலகில் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நின்று யோசிப்பதில்லை..

    மறுமொழி

  6. N.Rathna Vel
    டிசம்பர் 20, 2011 @ 02:15:30

    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

  7. பிரபுவின்
    டிசம்பர் 20, 2011 @ 04:16:39

    “எமது தமிழ்த் தாய்மார் இப்படி நடக்கிறார்களா?

    இப்படிப் புத்தகம் வாசிப்பார்களா? ”

    நியாயமான கேள்வி.
    அருந்தகவலுக்கு நன்றி சகோதரி.

    மறுமொழி

  8. பழனிவேல்
    டிசம்பர் 20, 2011 @ 05:52:38

    “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”
    குழந்தை வயதிலே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிறைந்த அறிவைப்பெறுகின்றனர்.அருமை

    மறுமொழி

  9. சத்ரியன்
    டிசம்பர் 20, 2011 @ 09:10:03

    உங்களின் அனுபவ பகிர்வு எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    நன்றிகள்.

    மறுமொழி

  10. மாலதி
    டிசம்பர் 20, 2011 @ 09:46:11

    ஒரு மிகசிறந்த பணியை எதிர்கால இளம் தலைமுறையினருக்கு செய்கிறீர்கள் சிறப்பு பாராட்டுகள் தொடர்க ….

    மறுமொழி

  11. jaghamani
    டிசம்பர் 22, 2011 @ 18:25:41

    இந்த அனுபவம் ஒருவரையாவது வாசிக்கப் பண்ணினால் அது எனது வெற்றி, உங்கள் ஒளிமய எதிர்காலமுமாகும். நல்லதிஷ்டம் கிட்டட்டும்

    அருமையான ஆக்கபூர்வமான பணிக்குப் பாராட்டுக்கள்..

    மறுமொழி

  12. Madhu Mathi
    ஜன 30, 2012 @ 20:48:09

    வாசிக்கும் மனிதனால் மட்டுமே நல்லவற்றை சுவாசிக்க முடியும்..நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி..

    மறுமொழி

  13. Madhu Mathi
    பிப் 11, 2012 @ 11:02:58

    இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..
    http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.html

    மறுமொழி

  14. கோமதிஅரசு
    பிப் 11, 2012 @ 11:02:59

    “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”
    குழந்தை வயதிலே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிறைந்த அறிவைப்பெறுகின்றனர்.//

    நல்ல பகிர்வு சகோதரி.
    குழந்தைகளிக்கு சிறு வய்து முதற்கொண்டே வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வரவேண்டும்.
    நன்றி.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 11, 2012 @ 14:07:29

      மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

SUJATHA -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி