ஆகாயம். 26

வாழ்வியற் குறட்டாழிசை.

ஆகாயம். 26

ஆகாயம், அந்தரம், பேரண்டப் பெருவெளி
ஆதாயம் வழங்குகிறது சீவன்களிற்கு.

ஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு
வானமெனும் ஆகாயமும் ஒன்றாம்.

சுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்
எட்டிட முடியாத ககனம்.

மண்ணில் விழாத விதானம், குறைக்கவோ
எண்ணினால் கூட்டவோ இயலாதது.

அழியாத, முடிவற்ற, ஒப்பற்ற ஆகாசத்தை
அண்ணாந்தே பார்க்க வேண்டும்.

ஆவி, புகை வானச்சுவரிலரிய
ஓவியமிடுவது ஒப்பற்ற காட்சி.

காலையோ, மாலையோ எப்போதும் ஒரே
கோலம் அல்லாத நிரூபம்.

இடி, மின்னலிற்கும் வளி மண்டலம்
அடி பணியாத சாம்ராஜ்யம்.

கடல் நீல வெட்ட வெளியின்
கொடை – வானவில், மழை.

சுந்தர உலகைப் பார்க்கும் விண்
சூரிய, சந்திர இருப்பிடம்.

ஆத்மா, உடல் தனித்தனி போன்று
ஆகாயமும், மேகமும் தனித்தனியே.

அவதியான உலகில் எதுவுமே இல்லை
நிரந்தரம். வானமே நிரந்தரம்.

(ஆகாயத்திற்கு மறு பெயர்கள்:- அந்தரம், ஆகாசம், பேரண்டப் பெருவெளி, வானம், ககனம், விதானம், நிரூபம், வளி மண்டலம், வெட்ட வெளி, விண் – இன்னும் பலவாகலாம்.)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-4-2012.

 
 

35 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. மகேந்திரன்
    ஏப் 15, 2012 @ 07:51:17

    ஐம்பூதங்களின் முதலாம்
    ஆகாயத்தின் பெருமை கூறும்
    அழகிய கவி சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 15, 2012 @ 10:34:38

      மிக்க நன்றி சகோதரா. நேரம் கிடைத்து முதன் முதலாக வந்துள்ளீர்கள்.
      மிக மகிழ்வு.
      தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  2. b.ganesh
    ஏப் 15, 2012 @ 08:18:58

    இயற்கையை ரசிப்பதில் முதலிடம் வானத்திற்குத்தானே! மேகங்கள் ஒன்றிணைந்தும் பிரிந்தும் .உருவாக்கும் பலப்பல வடிவங்கள்தாம் எத்துணை ரசனை மிக்கவை. உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் பார்த்து ரசிக்க முடிவதும் வானும், நிலவும் அன்றோ! அருமையாய் கவி வழங்கிய தங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 15, 2012 @ 10:44:32

      மிக்க மிக்க நன்றி சகோதரா தங்கள் நீண்ட ரசனை மிகு வரிகளிற்கு.
      மிக மகிழ்வும் கொண்டேன்
      தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  3. Niranjana
    ஏப் 15, 2012 @ 08:21:08

    ஹை! நகர்ந்துக்கிட்டே இருக்கற அந்த வானம் நல்லாருக்கு. உங்களோட கவிதையும் எளிமையா, ரசிக்கும்படித் தாங்க இருக்கு. Thanks!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 15, 2012 @ 11:31:00

      ஓ! நிரஞ்சனா! நீண்ட நாட்களின் பின்..வந்துள்ளீர்!.
      மிக மகிழ்வும் நன்றியும் உமது இனிய வருகைக்கு.
      மிக மகிழ்வடைந்தேன்.
      இறையருள் நிறையட்டும்.

      மறுமொழி

  4. ஸ்ரீஸ்கந்தராஜா
    ஏப் 15, 2012 @ 08:34:44

    அவதியான உலகில் எதுவுமே இல்லை
    நிரந்தரம். வானமே நிரந்தரம்.

    மிகவும் அழகான சொற்பதங்கள்!!!
    வாழ்த்துக்கள் அம்மா!!

    மறுமொழி

  5. sureshkumar123
    ஏப் 15, 2012 @ 10:44:53

    வானுக்கு எல்லையில்லை…
    அதை நீங்கள் ரசித்தவிதம்…
    ரசனைக்கும் எல்லையில்லை என்பதை
    தெரிவிக்கின்றது

    மறுமொழி

  6. கோமதிஅரசு
    ஏப் 15, 2012 @ 11:17:24

    அவதியான உலகில் எதுவுமே இல்லை
    நிரந்தரம். வானமே நிரந்தரம்.//

    அருமையான கவிதை .

    வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும்
    நேரம் போவதே தெரியாது.
    வானம் நமக்கு நிறைய சேதிகள் சொல்லும்.

    மறுமொழி

  7. Kavialagan
    ஏப் 15, 2012 @ 11:19:30

    Padamum varikalum asaththal

    மறுமொழி

  8. விச்சு
    ஏப் 15, 2012 @ 11:21:35

    அழகான வானம்…

    மறுமொழி

  9. Dr.M.K.Muruganandan
    ஏப் 15, 2012 @ 12:17:55

    “சுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்
    எட்டிட முடியாத ககனம்…”
    அத்தனை சொற்களையும் அணைத்து
    அருமையான கவிதை.

    மறுமொழி

  10. கோவை கவி
    ஏப் 15, 2012 @ 12:35:42

    Umah Thevi likes this..
    Muthu Kumar likes this..
    Lovely Stars likes this..
    Arul Mozhi likes this..

    Umah Thevi :-
    அருமை!

    வசந்தா சந்திரன் likes this..
    Yashotha Kanth and Muthu Kumar like this..

    Yashotha Kanth:_
    அருமை சகோ…
    Vetha ELangathilakam:-
    Nanry Yasho and Muthu Kumar….God bless you all.

    Thushiyanthan Ganeshamoorthy and Ganeshanathan Murugesu like this..
    Thushiyanthan Ganeshamoorthy:-
    அருமையான வரிகள்.
    Vetha ELangathilakam:_
    Mikka Nanry.

    மறுமொழி

  11. ramani
    ஏப் 15, 2012 @ 15:01:14

    அவதியான உலகில் எதுவுமே இல்லை
    நிரந்தரம். வானமே நிரந்தரம்.

    அரிய பெரிய சிந்தனை
    வார்த்தைப் பிரயோகங்கள் மலைக்க வைக்கின்றன
    மன கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 15, 2012 @ 15:56:33

      ”..அவதியான உலகில் எதுவுமே இல்லை
      நிரந்தரம். வானமே நிரந்தரம்.

      அரிய பெரிய சிந்தனை
      வார்த்தைப் பிரயோகங்கள் மலைக்க வைக்கின்றன…”’
      சகோதரா! நான் உங்கள் சிந்தனைகளை எண்ணி மலைப்பதுண்டு. நன்றியுடன் மிக மகிழ்ச்சி உங்கள் கருத்திற்கு. இறையருள் நிறையட்டும்.

      மறுமொழி

  12. rathnavelnatarajan
    ஏப் 15, 2012 @ 15:02:00

    அருமை.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

  13. பழனிவேல்
    ஏப் 16, 2012 @ 04:22:47

    “காலையோ, மாலையோ எப்போதும் ஒரே
    கோலம் அல்லாத நிரூபம்.”

    ஆம், பல ரகசியங்களையும், ரசனையையும் உள்ளடக்கியது இந்த வான்வெளி.
    மிகவும் அருமை

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 16, 2012 @ 18:12:13

      ஆம் பழனிவேல் உமது ரசனையின் படியும் பல ரகசியங்கள் அடங்கியது வானம். யாராலும் அளக்க முடியாதது.
      மிக நன்றி கருத்திற்கு. மிக மகிழ்வும் கொண்டேன்.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  14. Senthilarasu
    ஏப் 16, 2012 @ 06:35:51

    வானிற்கு இத்தனை பெயர்களா…அது தான் தமிழின் சிறப்பு இல்லையா?

    கவிதை அருமை..

    மறுமொழி

  15. வே.நடனசபாபதி
    ஏப் 16, 2012 @ 07:01:14

    // அவதியான உலகில் எதுவுமே இல்லை
    நிரந்தரம். வானமே நிரந்தரம்.//
    நிதர்சன உண்மை. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  16. ஸாதிகா
    ஏப் 16, 2012 @ 09:40:27

    அழகுத்தமிழ்..

    அன்ன நடை

    தேன் சுவை

    அழகிய விளக்கம்

    இது தாங்கள் படைத்த கவிதைக்கு பொருந்தும் சகோ!வாழ்த்துக்கள்!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 16, 2012 @ 19:31:23

      அன்பின் ஸாதிகா
      இனிய வரவு.
      இதமான கவிதை வரிகள்.
      இனிப்பாக உள்ளது.
      மிக மகிழ்வும் கூட.
      மிக்க நன்றி.
      இறையாசி கிட்டட்டும்.

      மறுமொழி

  17. SUJATHA
    ஏப் 16, 2012 @ 18:34:23

    விண்ணில் இத்தனை அதிசயங்கள் நடைபெறுகின்றன. கண்ணுக்கு புலப்படாமலே அதிசயங்களை கண்மூடி மறைய முன்பும் காண்கின்றோம். அத்தனையும் கவியோடு அழகூட்டி வடித்த வரிகள் அருமை….பணிகள் தொடரட்டும்!!!!

    மறுமொழி

    • கோவை கவி
      ஏப் 16, 2012 @ 19:36:13

      பெண்ணே அன்பு சுஜாதா!
      விண்ணதிசயங்களிற்கு நல்
      வரிகள் தந்தமைக்கு
      மிக மகிழ்ச்சியும்
      வாழ்த்துகளும்.தெய்வத்
      திருவருள் நிறையட்டும்.

      மறுமொழி

  18. சத்ரியன்
    ஏப் 17, 2012 @ 00:26:35

    வியப்பு பொதிந்த விண்ணைப்பாட கன்னித்தமிழ் கன்னல் சொற்களில் சின்னச்சின்ன செய்தியாய் அழகிய கவிதை.

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி