4. பயணம் (மலேசியா) 5.

 

4. பயணம் (மலேசியா) 5.

திருமணம் இனிமையாக கோலாலம்பூர் சித்தி விநாயகர் கோவில் கொண்டாட்ட மண்டபத்தில் நடந்தது. கீழ் பகுதியில் இரவு உணவு மண்டபமாக ஒழுங்கு செய்திருந்தனர்.

புதுத் தம்பதிகள் போர்ணியோவில் மலேசியா ஆட்சிப் பகுதியான சரவக்கிற்கு (Sarawak )  சென்றனர். இது சாந்தியின் உத்தியோகப் பகுதியின் பரிசாக 3-4 நாள் பயணமாக இருந்தது.

நாமும் மகளவையுமாக அடுத்த நாள் ஒரு வாடகைக் கார் பிடித்து இடங்கள் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் புட்ற யெயா (Putra Jeya ) என்று கூறும் திட்டமிட்டுச் செய்த புதிய மலேசிய நிர்வாக நகரம் (administrative capital of Malaysia) சென்றோம். இங்கு நாம் ஒரு மணித்தியாலம் செலவழிக்கலாம் என்றார் சாரதி. (ஒரு மணி நேரம் போதாது)

கோலாலம்பூரின் மேலதிக சன நெருக்கம், அடைசல், தேக்கம் என்ற காரணங்களால் நிர்வாக நகரம் இங்கு மாற்றப்பட்டது. தேசிய தலை நகரமாக கோலாலம்பூரும், வியாபார, அரச நிர்வாகம் இங்குமாக உள்ளது.

இது ஆதியில் 1918ல் பிறங் பிசார் (Prang Besar  ) என்று பிரிட்டிசாரினால் திறக்கப்பட்ட இடமாம்.
97.4 விகித இஸ்லாமியரும், 1.0விகித இந்துக்களும், 0.9 விகித கிறிஸ்தவரும், 0.4 விகித புத்த மதத்தினரும், இன்னும் பலரும் வாழ்கின்றனராம் புற்ர யெயாவில்.
(3.5கி.மீட்டர்) குறுக்கு வெட்டு 2.7 மைல்களாகுமாம் இதன் இடப்பரப்பு.

சுமார் 9 பாலங்கள் இங்கு உள்ளதாம்.

இது 1990ல் தொடங்கிய வேலைத் திட்டம். 1999ல் கோலாலம்பூரிலிருந்து உத்தியோக பூர்வமாக இங்கு மாறினார்கள். கோலாலம்பூரிலிருந்து 25 கி.மீட்டர் தெற்காக இந்த நகர் உள்ளது.

துங்கு அப்துல் ரகுமான் புட்ற்ரா மலேசிய முதல் பிரதம மந்திரியின் பெயராம். புற்ரா(Putra ) என்றால் இராசகுமாரன். யெயா (success or Victory  )என்றால் வெற்றியாளன்-வெற்றி.

புற்ரயெயா கோலாலம்பூருக்கும் தேசிய விமான நிலையத்திற்கும் ( KLLA  ) நடுவில் உள்ளது.
மிகப் பெரிய உல்லாசப் பயண நகரமாகவும் நாட்டின் நிர்வாக நகரமாகவும், நாட்டின் அடையாளமாகவும் உள்ளது.
சைபர் யெயா குளம் ( Ciber Jeya lake ) சுற்றி வர உள்ளது.

பிரதம மந்திரியின் இருப்பிடம் பெர்டனா புற்ரா (Perdana Putra  ) என்றும்

Perdana Putra. (our photo)

– மகாநாடுகள் நடத்தும் கட்டிடத்தின்(convention center) கூரை வித்தியாசமானது. ( cowboy hat ) கூரை யாக உள்ளது. மிக அழகு!

convention center.

படத்தில் தெரியும் தெருவூடாக சென்று இடது புறமாகத் திரும்பிச் சென்றோம் (வாகனத்தில்). பின் டென்மார்க் வந்து வாசித்து அறிந்தேன். (இதன் கூகிள் படம் தான் நீங்கள் பார்ப்பது.)

இங்கு அரசாங்க நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மிக நவீனமாகக் கட்டப்பட்டு ஆடம்பரமாகவும் தோற்றம் தருகிறது. உள்ளே போனதும் பெரிய சதுக்கம் உள்ளது. அதுவே மிகக் கவர்ச்சியாக உள்ளது. வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தோம். வலது புறமாக இஸ்லாம் மதக் கோவில் (மொஸ்க்) ரோசா நிற கிரனைட் கல்லிலே கட்டப்பட்டு மிக அழகான தோற்றமாக உள்ளது.

My husband taking photo.

google photo.

இதன் ஸ்தூபி 116 மீட்டர் உயரமாக, 36 மீட்டர் சதுர அடியான அகலமாகக் கட்டப்பட்டது.15 ஆயிரம் மக்கள் கூடித் தொழ முடிந்த இடமாம். பக்தாத்திலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வந்து கட்டப்பட்டதாம். இந்தப் பள்ளிவாசல் அடித்தளச் சுவர்மொறக்கோ காசபலன்ங்கா(casabalanca) மாதிரியில் அமைந்ததாம். இதன் உள்ளே செல்ல அவர்களைப் போல உடையணிந்தால் தான் செல்ல முடியுமாம். செல்ல அனுமதி கிடைக்குமாம்.

நாம் வெளியே நின்று பார்த்து, புகைப்படங்கள் எடுத்தோம்.

our photo.

பள்ளி வாசல் மிக அமைதி, அழகோ அழகு, ஆடம்பரமாக இருந்தது.

இனி அங்கம் 6ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

3-8-2012

                                      
 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    ஆக 03, 2012 @ 22:46:31

    கட்டிட அமைப்புகள் ஒவ்வொன்றும்
    ஒவ்வொன்றை மிஞ்சும் படியாக் உள்ளன
    குறிப்பாக கௌபாய் தொப்பிக் கட்டிடம்
    நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
    உணர்வைத் தந்து போகின்றன தங்கள்
    புகைப்படங்க்களும் விளக்கங்களும்
    தொடர்ந்தே வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 07:42:34

      ”…கட்டிட அமைப்புகள் ஒவ்வொன்றும்
      ஒவ்வொன்றை மிஞ்சும் படியாக உள்ளன…”
      Yes exactly samme.

      சகோதரா! நாம் வாகனத்தில் பயணிக்கும் போது இந்த கௌபாய் கூரையைப் பார்த்து ”.. இதென்ன இப்படி ஒரு மாதிரி வித்தியாசமான உருவமாக உள்ளது..”.. என்று கூறினேன். சாரதிக்கு இவை விளக்கமின்றி இருக்கலாம். எல்லோருக்கும் எல்லாம் தெரியுமென்றில்லையே!
      என் கணவரோ மகளும் துணைவரும் கூட ஒரு கருத்தும் கூறவில்லை.
      இங்கு வந்து ஒவ்வொரு பெயராகப் போட்டு கூகிளில் இட்டுப் பார்க்கும் போது ஒரு நிறைவு, தெளிவு உருவாகியது. இதில் வரும் அத்தனை இடத்து ஆங்கிலப் பதங்களையும் கூகிள் படப் பகுதியில் இட்டுப் பாருங்கள் பிறந்ததின் பயன் புரியும். ( also cowboy roof )அப்படி ஒரு நிறைவு வரும். ஒவ்வொரு இடமும் பல கோணங்களில் கண்டு ரசிப்பீர்கள்!!!!!…
      மிக மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு. மகிழ்ந்தேன்.
      God bless you all.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  2. Kavialagan
    ஆக 04, 2012 @ 01:02:48

    Iniya payanam naraka amainthirukku unkalukku valthukkal

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 07:48:30

      நான் பயணக் கதை எழுதும் போது மிக மிக மகிழ்வடைவேன்.
      இது எனது 4வது பயணக் கதை.

      மிக மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு. மகிழ்ந்தேன்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    ஆக 04, 2012 @ 01:18:12

    படங்கள் மூலம் பகிர்வு அருமை…
    தொடருங்கள்… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 08:04:47

      மிக மிக நன்றியும், மகிழ்வும் தனபாலன் தங்கள் பின்னூட்டத்திற்கு.
      புகைப்படங்கள் மகளும், துணைவரும், நாமும் எடுத்து பகிர்ந்து கொண்டோம்.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  4. மகேந்திரன்
    ஆக 04, 2012 @ 02:10:41

    இடங்களும்
    புகைப்படமும்
    நெஞ்சில் நிலைகுத்தி
    நிழலாய் நிற்கிறது சகோதரி..

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 08:07:24

      மேலே கொடுத்த என் கருத்துகளையும் பார்த்து அனுபவிக்கலாம் தாங்களும்.
      மிக மிக நன்றியும், மகிழ்வும் மகேந்திரன் தங்கள் பின்னூட்டத்திற்கு.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  5. வெங்கட்
    ஆக 04, 2012 @ 02:19:09

    இனிய பயணம். உங்களால் நாங்களும் மலேசியா கண்டோம்… பகிர்வுக்கு நன்றி.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 08:14:42

      மிக மகிழ்ச்சி வெங்கட் என்னுடன் மலேசியா காண வருவது.
      பார்த்தவைகளை சரித்திர ஆதாரங்களுடன் தருவது எனக்கு மிக மிக மகிழ்வு.
      ஒரே ஒரு குறை இதை வாசிப்பவர்கள் பலர். கருத்திடுபவர்கள் சிலரே.
      (இது தான் ஒரு குறை எல்லோரும் பதிந்தால் எவ்வளவு நல்லது.)- இது பேராசையோ!!!!!!…..

      தங்கள் கருத்திற்கு மிக நன்றி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  6. கோமதிஅரசு
    ஆக 04, 2012 @ 04:14:33

    விரிவாக அருமையாக உள்ளது பயணத்தொடர்.
    படங்கள் எல்லாம் அழகு.
    நன்றி.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 08:18:52

      மிக மிக நன்றி சகோதரி கருத்திடலிற்கு. மிக மகிழ்ந்தேன்.
      தெய்வக் கிருபை நிறையட்டும்.
      (இன்னும் தங்கள் வலைக்கு வர முடியவில்லை.எனது கணனியின் பலவீனம் தான் போலும்.
      புதிது வாங்கத்தான் வேண்டும். போல உள்ளது.)

      மறுமொழி

  7. b.ganesh
    ஆக 04, 2012 @ 04:38:48

    உங்கள் மலேசியப் பயணத்தினை புகைப்படங்களுடன் விவரிக்கும் பாங்கு அருமை. முந்தைய பகுதிகளையும் படித்துவிட்டு தொட்ர்ந்து பயணிக்க வருகிறேன். செலவில்லாமல் உங்களுடன் மலேசியாவைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 11:52:21

      பயணிக்க வருவதில் மிக மகிழ்ச்சி. நிச்சயம் சுவையாக இருக்கும். கருத்திடலிற்கு மிக மகிழ்வும்,நன்றியும்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  8. sasikala
    ஆக 04, 2012 @ 06:43:05

    தங்களால் நாங்களும் அந்தந்த இடங்களுக்கு சென்று வந்தது போன்ற உணர்வு படங்கள் அருமை.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 04, 2012 @ 11:53:46

      மிக மகிழ்ச்சி சசி பயணிக்க வருவதில். நிச்சயம் சுவையாக இருக்கும். கருத்திடலிற்கு மிக மகிழ்வும்,நன்றியும்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  9. Vetha.Elangathilakam.
    ஆக 04, 2012 @ 06:46:48

    முனைவென்றி நா சுரேஷ்குமார் likes this..i FB
    Ganesalingam Arumugam, Abira Raj likes this..in கனவு விழிகள். FB.
    Rani Oye likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள், கவிதை குழுமம் – Kavithai Kulumam -FB
    Umah Thevi likes this..in வித்யாசாகர்

    மறுமொழி

  10. Ambaladiyal
    ஆக 04, 2012 @ 22:55:39

    சிறப்பான ஒரு பயண அனுபவம் படங்களும்
    அருமை!…தொடர வாழ்த்துக்கள்.மிக்க நன்றி
    அம்மா பகிர்வுக்கு .

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 05, 2012 @ 07:14:13

      மிக மிக நன்றி சகோதரி தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக மகிழ்ச்சி.
      ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  11. Dr.M.K.Muruganandan
    ஆக 05, 2012 @ 09:06:29

    நல்ல தகவல்கள்
    அருமையான புகைப்படங்கள்.
    பயணத்தில் இணைந்த உணர்வு கிட்டியது.

    மறுமொழி

  12. வே.நடனசபாபதி
    ஆக 06, 2012 @ 11:52:48

    கைக்காசை செலவழிக்காமல் புட்ற யெயா (Putra Jeya ) வை பார்க்க வைத்தமைக்கு நன்றி!

    மறுமொழி

b.ganesh -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி