249. ஆணி வேர்.

 

 

ஆணி வேர்.

 

அழிக்கவியலாச் சித்து(அறிவு) – மயக்கும்
மொழியொரு  முத்து
வாசிவாசியென்று வாசிக்கவூறும்
மொழியொரு ஊற்று.
மெல்ல மெல்ல உயரவுதவும்
மொழியொரு ஏணி.
தனிமை நீக்கி நிறைவு தரும்
மொழியொரு உறவு.

பழியுடை அநியாயத்திற்கு விசுக்கும்
மொழியொரு சவுக்கு.
அழிக்கவும் பாவிக்கும் புத்தியெனில்
மொழியொரு கத்தி.
விழி பிதுங்கும் துன்பத்தாலிளைப்பாறும்
மொழியொரு நிழல்.
அழிவுக்கில்லையிதன் துணையெனில்
மொழியொரு நண்பன்.

வழியில் வாழ்விலில்லை ஏகாந்தமேனெனில்
மொழியொரு காந்தம்.
எழிலான எதுகை மோனையும் மயக்கும்
மொழியொரு இயலிசை.
அழியா தெம்மின மாடாமலிருக்க
மொழியெம் ஆணி வேர்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
1-10-2012.

(18-9-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் மாலை(19.00-20.00) கவிதை நேரத்தில் என்னால் இக்கவிதை வாசிக்கப் பட்டது.)

Please see this also:-      கவிதைப் போட்டி.:-     http://kavithai7.blogspot.in/2012/09/kavithai-contest.html

 

                                           

21 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    அக் 02, 2012 @ 02:13:12

    அருமை வரிகள்…

    மிகவும் பிடித்தது :

    /// தனிமை நீக்கி நிறைவு தரும்
    மொழியொரு உறவு… ///

    வாழ்த்துக்கள் சகோ… நன்றி…

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 04, 2012 @ 20:35:54

      /// தனிமை நீக்கி நிறைவு தரும்
      மொழியொரு உறவு… ///

      மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு. மிக மகிழ்ச்சி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  2. Vetha.Elangathilakam.
    அக் 02, 2012 @ 06:52:20

    Murali Dharan likes this..in கவிதை முகம். (FB)
    Sathya Shree Dsmiler likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
    A Parthasarathy Sarathy, Stc college/ Ramanujam Pollachi, Works at Secretary
    ..likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
    Sundrakumar Kanagasundram and Kanagasundram Sundrakumar like this…in NINAIVE ORU SANGEETHAMநினைவே ஒரு சங்கீதம்.
    Lavi Langa, Aarhus School of Business, Denmark/
    மு. சுவாமிநாதன்.,Pondichéry, Puducherry, India/Friendsசெய்தாலி அ.கா, Office Admin Assistant at Schön Properties /FriendsPushpalatha Kanthasamy….likes this in my wall-FB
    நாயகி கிருஷ்ணா, அன்பு தோழி and Sathya Shree Dsmiler like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
    நாயகி கிருஷ்ணா, Prabhu Ramamoorthy, Works at Ordnance Factory Ambarnath
    .. and Thileepan Umarani Velan like this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam.
    கவிதைச் சங்கமம் and Neelamegam Tom like this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙.
    கவிதைச் சங்கமம்:-
    இன்பத் தமிழ் அருமை.
    Vetha ELangathilakam;-
    Glad. Thank you…

    ..
    ..
    ….
    ..

    மறுமொழி

  3. அ. வேல்முருகன்
    அக் 02, 2012 @ 07:21:34

    மொழியொரு கருவி
    முகம் பல தெரியாதிருந்தும்
    ஆம்
    அதுவொரு ஆணிவேர்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 04, 2012 @ 20:36:57

      ”..மொழியொரு கருவி
      முகம் பல தெரியாதிருந்தும்
      ஆம்
      அதுவொரு ஆணிவேர்…”’

      மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு. மிக மகிழ்ச்சி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  4. ramani
    அக் 02, 2012 @ 07:23:13

    மொழியின் வலிமை குறித்து
    சொல்லிப் போகும் கவிதை
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 04, 2012 @ 20:38:30

      ”…மொழியின் வலிமை குறித்து
      சொல்லிப் போகும் கவிதை….”

      ஆம்.
      மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு. மிக மகிழ்ச்சி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  5. rathnavelnatarajan
    அக் 03, 2012 @ 01:27:56

    அழகு தமிழ் கவிதை.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 04, 2012 @ 20:39:35

      ”…அழகு தமிழ் கவிதை.
      வாழ்த்துகள்…..”

      ஆம்.
      மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு. மிக மகிழ்ச்சி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  6. பிரபுவின்
    அக் 03, 2012 @ 12:42:59

    “மொழியொரு ஊற்று”

    அழகு தமிழில் கவிதையாக தந்துள்ளீர்கள்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 05, 2012 @ 06:01:51

      ”…“மொழியொரு ஊற்று”…”

      மிக்க நன்றி- மகிழ்ச்சி பிரபு வருகைக்கும் கருத்திற்கும்.
      ஓரு மின்னஞ்சல் போட்டேன் பார்க்கவில்லையா?.

      மறுமொழி

  7. Mohan Divya P
    அக் 04, 2012 @ 03:17:23

    அருமை கவிதை தனிமை நீக்கி நிறைவு தந்தது

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 05, 2012 @ 06:23:38

      ”…அருமை கவிதை தனிமை நீக்கி நிறைவு தந்தது…”’

      மிக மகிழ்வும் நன்றியும் மோகன் திவ்வியா தங்கள் கருத்திடலிற்கு.
      .ஆண்டவன் அருள் நிறையட்டும்

      மறுமொழி

  8. மஞ்சுபாஷிணி
    அக் 04, 2012 @ 08:08:50

    அன்பின் வேதாம்மா,

    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன், சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்க….

    வேதாம்மா மனதிற்கு எப்போதும் வயது 10. அத்தனை சுறுசுறுப்பும் குழந்தைச்சிரிப்புமாக தான் இருப்பார்.. நான் எப்போது தொலைபேசியில் கதைத்தாலும் ஒரு குழந்தையிடம் பேசுவது போலவே ஒரு உணர்வு இருக்கும் எனக்கு. அத்தனை சந்தோஷமும் குரலிலிலும் இவர் எழுதும் கவிதை வரியிலும் தெறிக்கும் என்றால் பாருங்களேன். வேதாம்மாவின் சில பதிவுகளை பார்ப்போமா?

    வளர்பிறையே
    வெண்மேகத்துள் நடக்கும்
    இரட்டைக்கட்டிலில்

    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 05, 2012 @ 06:26:26

      தங்கள் அறிமுகத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
      வலைச்சரத்திலும் கருத்திட்டுள்ளேன்.
      எனது முகநூலிலும் இதைப் பகிர்ந்துள்ளேன்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  9. கீதமஞ்சரி
    அக் 04, 2012 @ 12:41:41

    மொழியின் வீச்சை உங்கள் வரிகளில்தான் உணரவேண்டும். எத்தனை எத்தனை அருமையான வரிகளால் மனத்தினை வருடுகிறீர்கள். மொழியின் பெருமை போற்றும் கவிதைக்கும் படைத்தக் கரங்களுக்கும் என் வந்தனம். பாராட்டுகள் தோழி.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 05, 2012 @ 06:28:39

      ”…மொழியின் வீச்சை உங்கள் வரிகளில்தான் உணரவேண்டும். எத்தனை எத்தனை அருமையான வரிகளால் மனத்தினை வருடுகிறீர்கள். மொழியின் பெருமை போற்றும் கவிதைக்கும் படைத்தக் கரங்களுக்கும் என் வந்தனம். பாராட்டுகள் தோழி…”

      மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
      மகிழ்ந்தேன். ஆண்டவனருள் நிறையட்டும்.

      மறுமொழி

  10. pathmasri
    அக் 04, 2012 @ 17:44:10

    மொழிக்கு இவ்வளவு தன்மை இருக்கு என்பதை அழகான வரிகள் மூலம் தந்திருக்கிறீர்கள்.
    நன்றியுடன்,
    -சிரபுரத்தான்-

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      அக் 05, 2012 @ 06:30:19

      ”..மொழிக்கு இவ்வளவு தன்மை இருக்கு என்பதை அழகான வரிகள் மூலம் தந்திருக்கிறீர்கள்…”

      மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திடலிற்கு.
      மகிழ்ந்தேன். ஆண்டவனாசி நிறையட்டும்.

      மறுமொழி

  11. ஸாதிகா
    அக் 05, 2012 @ 04:33:26

    அருமையாக சொல்லி இருக்கீங்க.வாழ்த்துகக்ள்!

    மறுமொழி

Vetha.Elangathilakam. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி