296. நினைவூர்…..

uur

நினைவூர்…..

நினைவூரில் நின்று மனவூரில் வரையும்
நித்திலவூர்ச் சித்திரங்கள் முயற்சியில் நிலைக்கும்.
கனவூர்க் கற்பனைகள் வினையூரில் ஊன்றும்
நிரந்தரவூர் மிதித்து உயர் சித்திரங்களாகும்.

உறவூர் காணத் தினமேங்கு´முள்ளம்
உறங்காவூர்ப் பறவையாகாது அக்கறையூர் செல்லும்.
கவலையூர் விலகிக் கருத்துடை சிகரவூர்
தொடுமூர் இயலாமை அசதியற்ற ஊக்கவூர்.

நட்பூரில் இணைந்தும் நெருங்காது விலகி
நடிப்பூர் நகர்தல் நன்மையற்ற நடத்தை.
கெட்டவூரையும் கெட்டித்தனமாய்த் தட்டித் தாலாட்டும்
தொட்டிலூர்த் தொண்டு சிறப்புத் திருத்தம்.

பசுமையூராம் பாசவூர் சில மனம்.
பஞ்சவூர் பாசமுதிர்க்க சில மனம்.
பட்டூரேகும் நட்பு பாழாகி யொரு
கெட்டூரேகும் தலைவிதி பாவம், சோகம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-12-2013.

Keefers_Dividers441

22 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. GOPALAKRISHNAN. VAI
    டிசம்பர் 06, 2013 @ 15:48:48

    நினைவூர் என்ற தலைப்பில் எங்களை 22 ஊர்களுக்குக் கூட்டிசென்று அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 06, 2013 @ 16:07:52

    அருமை சகோதரி…

    எந்த ஊர் என்பவளே…
    இருந்த ஊரைச சொல்லவா…?
    அந்த ஊர் நீயும் கூட
    அறிந்த ஊர் அல்லவா…? – என்ற கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடல் ஞாபகம் வந்தது…

    மறுமொழி

  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    டிசம்பர் 06, 2013 @ 16:50:30

    வணக்கம்
    சகோதரி

    சிறப்பான கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  4. மகேந்திரன்
    டிசம்பர் 06, 2013 @ 18:49:52

    சொல்லூரில் நீவீர் வடித்த கவி
    உள்ளத்தூரில் தங்கி இசைபாடுகிறது…
    அருமையாக இருக்கிறது வேதாம்மா…

    மறுமொழி

  5. ramani
    டிசம்பர் 06, 2013 @ 21:42:22

    மிக மிக அற்புதமான கவிதை
    கருத்தும் சொற்கட்டும் மனம் மயக்கிச் செல்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  6. தி தமிழ் இளங்கோ
    டிசம்பர் 07, 2013 @ 00:39:27

    நினைவூரில் நின்ற ஊர்கள் எத்தனை? எத்தனை? கற்பனையூர் சென்று வந்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  7. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 07, 2013 @ 04:21:45

    பசுமையூராம் பாசவூர் சில மனம்.

    பதிவூரில் மலர்ந்த பலவூர்கள் மண்க்கிறது ..!

    மறுமொழி

  8. karanthaijayakumar
    டிசம்பர் 08, 2013 @ 02:43:40

    நினைவூர்
    என்றும்
    நெஞ்சில்
    நிற்கும்.
    நன்றி
    சகோதரியாரே

    மறுமொழி

  9. Seeralan
    டிசம்பர் 21, 2013 @ 19:49:54

    ஊரெல்லாம் சொல்லி உலகையே காட்டுகின்ற
    சீரெல்லாம் தந்தீர் சிறப்பு !

    வார்த்தைகளின் சேர்க்கை அருமை அருமை
    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  10. raveendran sinnathamby
    ஜன 24, 2014 @ 09:31:29

    ஊரோடு கவி சொன்னாய்
    பேரோடு வாழ்க பயன்

    மறுமொழி

  11. கோவை கவி
    டிசம்பர் 14, 2015 @ 12:42:57

    You, Verona Sharmila, Sujatha Anton, Loganathan Ratnam a, Malini , Raj kumar, Pushpalatha, mullai amuthan..n like this.
    Comments

    Sundrakumar Kanagasundram :- Good Morning.SUPER thank you.
    December 14, 2013 at 8:03am · Like · 1

    Vetha Langathilakam :- http://youtu.be/rKDLm1pnaAg

    மறுமொழி

  12. கோவை கவி
    டிசம்பர் 14, 2015 @ 12:44:26

    Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி .
    December 14, 2013 at 7:47pm ·

    Sakthi Sakthithasan ,:- அன்பினிய சகோதரி , எந்தவூரில் நின்றாலும் தன் பிறந்தவூரின் முகவரியுடன் தன்னை வாழவைக்க்ய்ம் ஊரிற்கு நன்றியுடன் வாழும் எவருமே வெற்றி பெற்றவர்களாவார். அவ்வகையில் நீங்களும் வெற்றி பெற்றவரே !
    December 14, 2013 at 7:51pm ·

    Sundrakumar Kanagasundram :- Good Evening.
    December 14, 2013 at 7:56pm ·

    Vetha Langathilakam:- Thank you all of you.
    December 19, 2013 at 8:41pm ·

    மறுமொழி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி