300. பண்பு.

19567-mm

பண்பு.

மகத்துவ வாழ்வின் முறுவல் அலங்காரம்.
மனிதனின் மாண்புடை மகோன்னத ஆபரணம்.
மனித அறிவிலும் உயர்ந்ததும், மதிப்புடையதும்
புனித தகுதிகாண் சொத்து பண்பு.
குழுநிலைப் பழக்கம், நன்னடத்தை, மரபுகளை
வழுவாது காலகாலமாகப் பேணுதல் பண்பு.

மரபணுவோடு இயல்பாய்ப் பெறுவதும், முயற்சியாம்
வரத்தில் தேடிப் பெறுவதும் பண்பாகும்.
வாய்மை, உழைப்பு, கொள்கை, துணிவின்
தூய்மை, அன்போடு உதிப்பான் பண்பாளன்.
நட்பு, ஒழுக்கம், செய்ந் நன்றியை
திட்டமுடன் தேடுமிவன் சமூக மாதிரியாளன்.

பல்லறிவின் மூலாதாரம் வியப்புறு நன்மூளை.
பண்பின் காவலன் நல் மனச்சாட்சி.
பண்பின் பலம், ஆதாரம் நல்லிதயம்.
நற்பழக்கப் படிகள் மதிப்பு மரியாதை.
அற்புதமிது சிறு செயல்களிலும் பிரதிபலிக்கும்.
கற்பனையன்று சமூகக் காந்தம் பண்பாளன்.

பிறரை வசீகரிக்கும் மேன்மை ஒழுங்குணர்வாளன்.
சிறப்பு! குருதியிலூறியது இவன் பண்பு!
இறக்கமெனும் பாதை இவன் காண்பதரிது
அறநூல் போன்றது பண்பாளன் வாழ்வு.
சிறத்தல் தவிர திறம்புதலில்லாததிவன் வாழ்வு.
சிறப்பப்பாயிர மேன்மையது பண்பாளன் வாழ்வு.

 வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-1-2014.

பண்பு

முன்னிற்கும் மனிதப்பண்பு
மன்னிக்கும் தெய்வப் பண்பு
மன்னிப்பு குற்றம் தடுக்கும்
மன்னிப்பு குற்றம் பெருக்கும்

26-6-2004

dividers

22 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. இளமதி
    ஜன 02, 2014 @ 08:54:01

    பண்பினைப் போற்றிடப் பார்புகழும் வாழ்க்கையே!
    அன்பும் பெருகும் அறி!

    பண்பைப் போற்றும் பயன்தரு கவிதை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 02, 2014 @ 10:50:41

    //அறநூல் போன்றது பண்பாளன் வாழ்வு…//

    சிறப்பான வரிகள் பல…

    வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜன 02, 2014 @ 12:38:39

    வணக்கம்
    சகோதரி
    <<>>

    கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜன 02, 2014 @ 12:40:41

    வணக்கம்
    சகோதரி
    (((மரபணுவோடு இயல்பாய்ப் பெறுவதும், முயற்சியாம்
    வரத்தில் தேடிப் பெறுவதும் பண்பாகும்.)))

    சிறப்பாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  5. கோமதிஅரசு
    ஜன 02, 2014 @ 13:24:21

    பண்பின் காவலன் நல் மனச்சாட்சி.
    பண்பின் பலம், ஆதாரம் நல்லிதயம்.
    நற்பழக்கப் படிகள் மதிப்பு மரியாதை.//
    அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  6. karanthai jayakumar
    ஜன 02, 2014 @ 14:02:03

    பண்பு பற்றி
    ஒரு பண்பானக்
    கவிதை
    நன்றி சகோதரியாரே

    மறுமொழி

  7. வை. கோபாலகிருஷ்ணன்
    ஜன 02, 2014 @ 15:01:19

    பண்பான கவிதையை அன்பாக வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.

    மறுமொழி

  8. ramani
    ஜன 02, 2014 @ 22:44:02

    பண்படுத்தும் பண்பின் சிறப்புக் கூறும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

  9. வெற்றிவேல்
    ஜன 03, 2014 @ 05:39:02

    பண்பு, ஒழுக்கம் பற்றிய சிறப்பான கவிதை…

    மறுமொழி

  10. Seeralan
    ஜன 04, 2014 @ 08:09:26

    பண்புறு பாடல் பயின்றிட வாழ்வோடு
    பண்பினைச் சேர்க்கும் படர்ந்து !

    அழகிய அர்த்தமுள்ள படைப்பு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    மறுமொழி

  11. கோவை கவி
    அக் 17, 2014 @ 06:25:42

    சிவரமணி கவி கவிச்சுடர்:-
    மிக அருமை வேதாம்மா நன்றி

    மறுமொழி

  12. கோவை கவி
    ஜன 10, 2018 @ 12:01:47

    Loganadan Ps:- பண்பிற்கான அற்புத விளக்கம். அருமை

    Ganesalingam Arumugam;. வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக