35. Archana-Vinoth திருமண வாழ்த்து

12 x 18 copy

திருமண வாழ்த்து

மணமகன்: மணமகள்:
திருநிறைச் செல்வன் திருநிறைச் செல்வி
வினோத் அவர்கட்கும் அர்ச்சனா அவர்கட்கும்

சிட்டுக் குருவிகளாய்க் குழந்தையிலிருந்து இன்றுடன்
நட்பு வட்டத்துள் தாரகைகளாய்; ஐவர்
ஒட்டியுறவாடித் நல்ல திறமைகள் காட்டினார்.
கெட்டித்தனமாய் ஆடல், பாடல், படிப்பிலும்
சுட்டித்தனத்தால் ஊக்கமாய் விளையாட்டுப் போட்டிகளையும்
தொட்டு எல்லா மேடைகளிலுமேறி மின்னினார்கள்!

அர்ப்பணமாக்கிய ஐவர் அன்பும் வியப்புடன்
கர்வமாய்க் கங்கையாயோடிக் கவனம் கவர்ந்தது.
வேர் கொண்ட கலாச்சாரச் சம்பவம்.
சர்க்கரையாய் இனித்து இன்று நிகழ்வது
சொர்க்கத்தில் நிச்சயித்த அதிஷ்டப் பிணைப்பு
அர்ச்சனா – விநோத் விவாகக் கொண்டாட்டம்.

ஐந்து நட்சத்திர நங்கைகளில் ஒருத்திக்கு
வந்த மாங்கல்ய இன்பம் நலமாகட்டும்!
பந்தமாம் கல்யாணத்தோடு நட்பு வளையமும்
சொந்தம் கொண்டாடட்டும் என்றும்! மணமக்கள்
சந்ததி பெருக்கி தம்பதிகள் சீரோடு
சந்தணமாய் மணக்க வாழ்க பல்லாண்டு!

தோழிகள்:
நேற்றுவரை நாம் ஒன்றாய் கலந்தோம்!
இன்றிலிருந்து வாழ்க்கைத் துணையோடு இணைகிறாய்
ஓன்றாய்ப் பழகிய நட்பு மறக்கவியலாதது.
பிரிவால் மனம் வருந்தினும் நட்புச்
சங்கிலி இறுகட்டும்! உன் ஒளிமயமான
எதிர்காலம் சிறப்புடன் ஓளிர வாழ்த்துகள்

வாழ்த்துவோர் – அன்புத் தோழிகள்.
Written by Vetha.Elangathilakam.
Demark.

P1070466

images 2356

12 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    மே 21, 2014 @ 10:00:43

    புதுமணத் தம்பதிகளுக்கு
    எங்களது மனம் கனிந்த நல்வாழ்த்துக்களும்
    உரித்தாகுக

    மறுமொழி

  2. கோமதி அரசு
    மே 21, 2014 @ 10:34:48

    ஒளிமயமான
    எதிர்காலம் சிறப்புடன் ஓளிர வாழ்த்துகள்//
    மணமக்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்.
    வாழ்க வளமுடன்.

    மறுமொழி

  3. Rajarajeswari jaghamani
    மே 21, 2014 @ 16:57:55

    வாழ்த்துவோம்

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    மே 22, 2014 @ 01:15:52

    புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  5. karanthaijayakumar
    மே 23, 2014 @ 14:43:20

    மணமக்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  6. yarlpavanan
    மே 26, 2014 @ 05:25:22

    புதுமணத் தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

    மறுமொழி

ramani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி