329. மாதிரிப் படவழகியே! (மாடல்)

untitled-3-copy

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

1. படத்திற்கு வரிகள்:-

மாதிரிப் படவழகியே! (மாடல்)

ஓரத்திலமர்ந்து ஒய்யாரம் காட்டும்
ஓவியமோவிது உயிரோவியமோ வென
ஓப்பனை ஏமாற்றும் உருவிது

திருவுருவான திருப்பாவையிவள்
திருமதியோ செல்வியோ ஒரு
திருமாங்கல்யமும் தென்படலையே!

பூக்கூடை கையேந்தி வாயிலிலே
பூத்திருக்கும் விழியழகி யாருக்கோ
பூரிக்கிறாளா காஞ்சிப் பட்டுடுத்தி!

நிழற்பட மாதிரி  இவளோ!
நிசக் காதலியோ! கருத்தாய்
நின்றிடும் தோரணை காதலனுக்காகவோ!

பூக்காரியும் இவளில்லை! ஏழைமைப்
பூஞ்சணமும் இவளில் இல்லை
பூஞ்சிட்டிவளொரு மாதிரிப் படவழகி.

பளபளக்கும் இவளுருப் போன்று
பளபளக்கும் பின்னணியும் இல்லை
வளவளப்பு ஏனிவள் மாதிரிப்படவழகியே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-8-2014

imagesCADKKMCK

399246_444298312289865_153065198_n

2. கவிதை – விருப்புத் தலைப்பு

விரைந்து வருவானோ!

மலர் மணம் சூழ் நந்தவனத்தில்
மகிழ் குளிர் குடைநிழற் கீழ்
மேகமிடு வில்லின் அழகின் கீழ்
தாகம் தணியச் சாரலில் நனைந்தேன்.

ஈரமுலர சந்திரனை ஏனோ காணேன்
ஈகையாளன் என்னவனையும் காணேன்
ஈரப்பற்றென் மேல் உலர்ந்ததோ அறியேன்.
ஈடுபாடு குறையாக் காதலோடு காத்துள்ளேன்.

மின்னல் கூறுவ தென்னவாயினு மவன்
இன்னலற்று வரும் பாதை காட்டட்டும்.
மின்னும் மூக்குத்தி நினைவு வந்துடன்
மின்னலாய் வந்திடானோ மிகச் சேதியறிய.

மலர் மணம் விரிக்கத் தன்
மனை நினைவு சிரிக்க இவன்
மலரேந்தி வருவானோ, இன்று என்
மனம் மகிழச் செய்வானோ விரைவாக.

நீளும் வாழ்வில் என்னைத் தமிழ்
ஆளும் திறன் போன்று மகிழ்
பெருக்கி  ஆள அவன் வரும்
தருணம் நெருங்கி வரட்டும். வரட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-8-2014

imagesCADKKMCK

26 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. karanthaijayakumar
    ஆக 15, 2014 @ 00:13:11

    அருமை சகோதரியாரே

    மறுமொழி

  2. Bagawanjee KA
    ஆக 15, 2014 @ 01:57:52

    படவழகி ..புதிய தமிழ்ச்சொல் ,உங்கள் கவிதைப் போன்றே இனிமை !
    pl.visit >>>இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா ?
    http://www.jokkaali.in/2014/08/blog-post_14.html

    மறுமொழி

  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஆக 15, 2014 @ 06:02:00

    வணக்கம்
    சகோதரி

    தங்களின் கவிதை வந்துகிடைத்துவிட்டது மிக்க மகிழ்ச்சி. தற்போது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது, என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
    ——————————————————————————————————-
    தீபாவளித் திருநாளை முன்னிட்டு
    ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
    என்று தலைப்பிடவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 15, 2014 @ 07:43:21

      மிக்க நன்றி ரூபன்.
      வழக்கமாகப் போட்டியென்றால் அக்கவிதை
      எங்கும் இடாது முடிவு தெரியும் வரை அமைதி காப்போம்.
      அதனாலேயே பல கேள்விகள் எழுந்தது.
      தலைப்பிடவே தயக்கமாக இருந்தது.
      இதோ போட்டாகியது….தலைப்பு.
      நன்றி மறுபடியும். (சும்மா ஓரு எதிர்பார்ப்பற்ற முயற்சி தானே)

      மறுமொழி

  4. கோவை கவி
    ஆக 15, 2014 @ 06:04:09

    You, Karthikeyan Singaravelu and Yousuf MOhamed like this…

    Yousuf MOhamed :-
    அருமையான வரிகள்”நச்”!!!!,

    Sivakumary Jeyasimman :_
    நீளும் வாழ்வில் என்னைத் தமிழ்
    ஆளும் திறன் போன்று மகிழ்
    பெருக்கி ஆள அவன் வரும்
    தருணம் நெருங்கி வரட்டும். வரட்டும். அழகான வரிகள் அக்கா

    Vetha:-
    எல்லோரும் லைக் போடும் போது கருத்து எழுதுவது ஊக்கம்……
    மிக்க நன்றி யூ. மொகமட் – சிவகுமாரி.
    இறையாசி நிறையட்டும்.

    மறுமொழி

  5. சீராளன்
    ஆக 15, 2014 @ 06:34:48

    கருத்தாளம் கொண்ட கவியாக்கி தந்தீர்
    விருப்போடு சேரும் விருது !

    அழகிய படமும் கவியும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    மறுமொழி

  6. சிவா
    ஆக 15, 2014 @ 12:34:41

    இப்படி நீங்கள் எழுதிவிட்டால்
    என் போன்று (தமிழ்) ஏழைச்
    சிறுவன் என் செய்வதாம்….

    ஹா ஹா ஹா.. மிக அருமை வேதாம்மா..

    மறுமொழி

  7. mahalakshmivijayan
    ஆக 16, 2014 @ 04:31:08

    இரண்டு கவிதைகளும் அருமை அருமை.. வாழ்த்துக்கள் சகோதரி 🙂

    மறுமொழி

  8. கோவை கவி
    ஆக 16, 2014 @ 08:51:55

    Mani Kandan:-
    பூக்கூடை கையேந்தி வாயிலிலே
    பூத்திருக்கும் விழியழகி யாருக்கோ
    பூரிக்கிறாளா காஞ்சிப் பட்டுடுத்தி! அருமை

    Vetha ELangathilakam:-
    Mikka …nanry……

    மறுமொழி

  9. Mrs.Mano Saminathan
    ஆக 17, 2014 @ 12:45:02

    கவிதையும் தலைப்பும் மிக அருமை வேதா!!

    மறுமொழி

  10. Dr.M.K.Muruganandan
    ஆக 20, 2014 @ 07:00:19

    அருமையான கவிதைகள்

    “..மலர் மணம் விரிக்கத் தன்
    மனை நினைவு சிரிக்க இவன்
    மலரேந்தி வருவானோ..”

    ரசித்தேன் வரிகளை

    மறுமொழி

  11. yarlpavanan
    ஆக 22, 2014 @ 23:47:53

    பாவரிகள் நன்று
    சிறந்த பதிவு – முடிவு
    நடுவர்களின் கையில் இருக்கிறதே!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    மறுமொழி

  12. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
    ஆக 28, 2014 @ 13:56:09

    //நிழற்பட மாதிரி இவளோ!
    நிசக் காதலியோ! // மிக அருமை சகோதரி!
    இரு கவிதைகளும் மிகவும் அழகாய் படைத்துள்ளீர்கள்..இவற்றைப் படித்தபின் நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள யோசிக்கிறேன் 🙂
    வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  13. இளமதி
    ஆக 28, 2014 @ 14:00:33

    முதலில் தாமதமான கருத்திடலுக்கு வருந்துகிறேன் சகோதரி!
    ஏனோ உங்கள் பதிவு என் கண்களில் சிக்கவில்லை…

    இரண்டு கவிதைகளும் சிறந்த கற்பனை!
    முதலாவது முற்றிலும் யாருமே சிந்திக்காத கோணம். அருமை!

    இரண்டாவது கவிதை படமும் அசத்தல்! மிகச் சிறப்பான கவிதையும்!

    போட்டியில் வெறிபெற வாழ்த்துக்கள் சகோதரி!

    மறுமொழி

  14. பி.தமிழ் முகில்
    செப் 01, 2014 @ 02:17:39

    கவிதைகள் இரண்டுமே அருமை கவியே. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் கவியே !

    மறுமொழி

சீராளன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி