344. எட்டும்வரை எட்டு!

set and reach goal concept

எட்டும்வரை எட்டு!

ட்டுத் தொகை நூல்கள்
எட்டுத் தர எட்டாய்
எண்பத்து நான்கு கலைகள்
கொட்டித் தந்தனர் முன்னோர்.
எட்டு! மேலெட்டு! உனக்கும்
பொட்டு வைத்ததாய் நற்பெயரைத்
தொட்டிட எட்டும் வரையெட்டு!
நட்டிடு ஒரு நற்பேயரை!

ட்டு விடுதல் ஒரு
பட்டு நோக்கமானால் அதை
விட்டு விடாதே பிடி!
தட்டுவோர் தடுப்போரை விலக்கி
கொட்டு உன் நோக்கத்தை!
கிட்டுதலை விட்டிடாது ஊடுருவி
வட்டமிடும் மீனின் வல்லமையாய்
எட்டு மலையுச்சியை! சாதனையை!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
21-11-2014

purple line  one

19 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Rajarajeswari jaghamani
    நவ் 21, 2014 @ 22:27:53

    எட்டு! மேலெட்டு! உனக்கும்
    பொட்டு வைத்ததாய் நற்பெயரைத்
    தொட்டிட எட்டும் வரையெட்டு!

    எட்டும் வகையில் எட்டு.

    மறுமொழி

  2. கோவை கவி
    நவ் 21, 2014 @ 22:35:39

    aam sakothary….எட்டும் வகையில் எட்டு.
    mikka nanry….

    மறுமொழி

  3. ramani
    நவ் 22, 2014 @ 00:21:29

    “எட்டும் வரை எட்டு ”
    எங்கள் இதயம் தொட்டது
    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. கோமதி அரசு
    நவ் 22, 2014 @ 01:17:21

    நற்பெயரைத்
    தொட்டிட எட்டும் வரையெட்டு!
    நட்டிடு ஒரு நற்பேயரை!

    அருமை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  5. தி.தமிழ் இளங்கோ
    நவ் 22, 2014 @ 01:20:16

    எட்டு, கொட்டு, பொட்டு, தொட்டு, நட்டு, பட்டு, தட்டு – என்று ஒலிநயமிக்க கவிதை ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

    மறுமொழி

  6. திண்டுக்கல் தனபாலன்
    நவ் 22, 2014 @ 02:40:18

    ரசித்தேன் சகோதரி…

    மறுமொழி

  7. கோவை கவி
    நவ் 22, 2014 @ 09:58:50

    Malini Mala:-
    தட்டுவோர் தடுப்போரை விலக்கி
    கொட்டு உன் நோக்கத்தை!

    Subajini Sriranjan :-
    எட்டும் வரை எட்டு!!
    எட்டுத்தொகைக்கு அழகாய் மெட்டெடுத்து பாட்டெடுத்தீர் இனி பத்துப்பாட்டில் சந்திப்போமே…..

    Vetha Langathilakam:-
    கருத்திற்கு மிக்க நன்றிடா.சுபா!
    வலையில் பாமாலிகை ”..தமிழ் மொழி..”
    என்ற தலைப்பில் 35 கவிதைகள் உண்டு.
    எங்காவது பத்துப் பாட்டும் இருக்கலாம்.
    நினைவில் இல்லையே…

    Vetha Langathilakam:-
    மாலினி மிக்க மகிழ்வுடன் நன்றியும்.
    மாலையில் தான் சிறிது அமரலாம் ஏதாவது பதிவிடலாம்.
    இன்று ஜோடி நம்பர் வன் போல டெனிசில்
    நடனப் பித்து அல்லது பைத்தியம் என்ற நிகழ்வு.
    கணவர் விழுந்து விழுந்து (நானும் தான்) பார்ப்போம்.
    பார்த்திட்டு இங்கு வந்தேன் தங்கள் கருத்துகள்
    தழுவியபடி இருந்தன மிக்க நன்றி.
    பதில் எழுத நேரமின்றி உள்ளது நாளை பார்ப்போம்.

    Gee Shankar:-
    அருமை

    Geetha Mathivanan:-
    பட்டுத்தமிழ்ப்பா மனம் கொள்ளைகொள்கிறது. பாராட்டுகள் தோழி.

    Muruguvalli Arasakumar:-
    அருமை

    சிறீ சிறீஸ்கந்தராஜா:-
    ” எட்டுத் தொகை நூல்கள் எட்டுத் தர எட்டாய்
    எண்பத்து நான்கு கலைகள் கொட்டித் தந்தனர் முன்னோர்”.

    Kannan Sadhasivam :-
    அழகிய சந்தம்

    Mani Kandan :-
    கிட்டுதலை விட்டிடாது ஊடுருவி வட்டமிடும் மீனின் வல்லமையாய்
    எட்டு மலையுச்சியை! சாதனையை! சந்தமிகு பா. அருமை

    Vetha Langathilakam:-
    எட்டுத் தர எட்டு எண்பத்து நாலு என்று கவனப்
    பிழையாக எழுதியிருந்தேன். எனது கவனத்திற்குக்
    கொண்டு வந்த சகோதரார் திரு சிறீசிறீஸ்கந்தராஜாவிற்கு
    மிக்க நன்றி.
    தவறுகளைச் சுட்டுங்கள்!
    எட்டுத் தர எட்டு அறுபத்துநாலு முதலாம் இரண்டாம் வகுப்பு வாய்பாடு…..

    R Thevathi Rajan :-
    அழகாய் எல்லோரின் உள்ளம் வரை

    எட்டும் படி எட்டா தூரத்தில் இருந்து

    பாங்காய் உரைத்தீர்கள் வணங்குகிறேன்

    வாழ்வில் நமக்கு எத்தனை ஏழரை வந்தாலும்

    எட்டு எட்டு என்றே சொல்லியே உழைத்தால்

    கிட்டுமே யாருக்கும் கிடைக்கா வெற்றிக்கனி

    பாராட்டுக்கள் உங்களுக்கு எனக்குள் எட்டியவரை…

    Vetha.Langathilakam:- சகோதரா நல்ல கவிதை வரிகள் கொண்ட கருத்து.
    மிக மகிழ்வுடன் நன்றியும்.
    இறையாசி நிறையட்டும்.

    மறுமொழி

  8. karanthaijayakumar
    நவ் 23, 2014 @ 02:14:22

    மகிழ்ந்து ரசித்தேன் சகோதரியாரே
    நன்றி

    மறுமொழி

  9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    நவ் 24, 2014 @ 04:04:07

    வணக்கம்
    சகோதரி

    அருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  10. raveendran sinnathamby
    நவ் 24, 2014 @ 11:26:24

    fine poem. santham Pesuthu

    மறுமொழி

  11. Kavignar valvai Suyen
    நவ் 29, 2014 @ 23:09:19

    எட்டும்வரை எட்டினேன் – என்
    எண்ணத்தில் எட்டவில்லை
    எட்டுத்தர எட்டு
    விட்டுவிட மாட்டேன்
    வட்டமிடும் மீன் நான்
    வலையை அறுத்தேனும் எட்டடா தம்பி
    அந்த எட்டுமலை உச்சியை என
    பாட்டாலே பொட்டு வைத்தீர் சகோதரி
    எண்பத்திநான்கு கலைகளில்
    எட்டையேனும் நான் எட்டுவேன்
    உங்களின் மாணவனாய்….
    எட்டுத்தொகை நூல்களை எட்டும் பாடல் மிக மிக அருமை சகோதரி…

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி