349. ஆணியிடட்டும் ஆழமாக…

527780_153197284815107_1622485494_n

ஆணியிடட்டும் ஆழமாக...

துயரத்தின் அடையாளங்களை அழித்தழித்து
துளிர்க்க நம்பிக்கை வார்த்து
துவளாது இறைவனை வேண்டியபடி
துளிர்க்கும் வாழ்விற்காகப் போராட்டம்.

வித்து பெற்றவர்கள் இணைவு
விலகாத உன் நினைவு
விடாது பிடிக்க ஆசை.
விலகாதே இணைந்திரு இன்பம்!

உறவு உறுதியான வேராக
உயிருக்குள் புகுந்தது இறுகி.
உலகு முடியும் வரையெம்
உணர்வோடு கலக்கக் களிப்போடிரு!.

ஆசை நிறைகின்ற வாழ்வு
ஆட வரம் நிறையட்டும்!
ஆணிப் பொன்னான உயிர்
ஆணியிடட்டும் ஆழமாக உலகில்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
17-12-2014

page_divider_2

11 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Rajarajeswari jaghamani
    டிசம்பர் 17, 2014 @ 22:31:30

    துளிர்க்க நம்பிக்கை வார்த்து
    துவளாது இறைவனை வேண்டியபடி
    துளிர்க்கும் வாழ்விற்காகப் போராட்டம்.

    ஆக்கம் அருமை..

    மறுமொழி

  2. karanthaijayakumar
    டிசம்பர் 18, 2014 @ 00:40:05

    உறவு
    உறுதியான வேறாக
    உயிருக்குள் கலந்து
    நன்மை பயக்கட்டும்
    அருமை சகோதரியாரே
    நன்றி

    மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 18, 2014 @ 02:43:46

    அருமை சகோதரி…

    மறுமொழி

  4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
    டிசம்பர் 18, 2014 @ 14:59:04

    உறவு உறுதியான வேராக இருக்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    மறுமொழி

  5. கீதமஞ்சரி
    டிசம்பர் 21, 2014 @ 01:20:15

    துயர்வுற்ற மனங்களை தூக்கி நிறுத்தும் அன்பும் ஆறுதலும் இணைந்த வரிகள். பாராட்டுகள் தோழி.

    மறுமொழி

  6. கோவை கவி
    செப் 05, 2017 @ 18:09:00

    Subajini Sriranjan:- இருப்பின் உயிர்ப்பாய்
    வாழ்வின் துடுப்பாய் வரிகள் ஆழம் பதிக்கின்றது…இன்பம்!!
    17 December 2014 at 22:38 ·

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- ஆசை நிறைகின்ற வாழ்வு
    ஆட வரம் நிறையட்டும்!

    ஆணிப் பொன்னான உயிர்ஆணியிடட்டும் ஆழமாக உலகில்!
    18 December 2014 at 06:06 ·

    Vetha Langathilakam:- அன்பின் சகோதரி சுபா,
    அன்பின் சகோதரர் சிறி
    இனிய நன்றிகள் தங்கள் கவனிப்பிற்கு.
    இதற்கும் நேரம் ஒதுக்கி வரவேண்டுமே இந்த அவசர உலகில்!.
    இடையில் தான் எத்தனை அலட்சியங்கள்..
    கவனிப்பின்மைகள்!!!…எம்மை அமுக்குகின்றன…..
    நன்றி..நன்றி..
    18 December 2014 at 08:35 ·

    Gomathy Arasu :- இறைவனை நம்புவோம்.
    18 December 2014 at 15:51 ·

    Vetha Langathilakam :- mikka nanry – glad sisters Gomathy and Sasikala…
    19 December 2014 at 08:52 ·

    Malini Mala :- ஆணிப் பொன்னான உயிர்
    ஆணியிடட்டும் ஆழமாக உலகில்!
    19 December 2014 at 08:55 ·

    யதார்த்த வாதி அருமையான பதிவு சகோ..!!
    19 December 2014 at 12:43 ·

    Sujatha Anton :- வித்து பெற்றவர்கள் இணைவு
    விலகாத உன் நினைவு
    விடாது பிடிக்க ஆசை.
    விலகாதே இணைந்திரு இன்பம்!
    அருமை…. சிந்தனைத்துளிகள் நிறைந்து, கருத்தாளம் மிகுந்த கவித்துவம்
    வாழ்க தமிழ்.!!!!
    19 December 2014 at 15:28
    ·
    Sujatha Anton :- கருத்தாள்ம மிக்க புகைப்படம். மிகவும் பிடித்துள்ளது. “கவிதாயினி வேதா“
    19 December 2014 at 15:30 ·

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- அருமையான பதிவு.
    19 December 2014 at 15:50 ·

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக