7. பாராட்டு விழா- 2015.

my.vila.15.gray 289-a

எனது பாராட்டுவிழாவில் பிரபலமான டென்மார்க் கவிஞர், மூத்தவர் பொன்னண்ணா சால்வை போர்த்தி கௌரவிக்க தலைவர் துஷ்யந்தன் கணேசமூர்த்தியின் அம்மா தங்கமணி கணேசமூர்த்தி வாழ்த்துப்பாவை வாசித்தார். வாழ்த்துப்பா வரிகளை கீழே வாசிக்க முடியும்

my.vila.15.gray 290-a

வேதாவின் தமிழ்ப் பணிக்கு
எமது நிறைவான வாழ்த்துப்பா மாலை..!
(காலம். 02.05-2015 வாழ்த்து..! நேரம் ..டென்மார்க்

கோப்பாய் மண்ணை நீர்பிறந்த மண்ணாக்கி
கும்பிட்ட கோயில் விட்டு, குடியிருந்த வீடுவிட்டு
படித்த பள்ளிவிட்டு பக்கமிருந்த உறவுவிட்டு
நாடுவிட்டு புலம்பெயர்ந்து. நாம,;அகதியானாலும்
பெற்றதாயைப்போல் பேணிவளர்க்கின்றீர் எம்தாய் தமிழை!
வாழிய! வாழிய! நின்பணி நீடூழி, நீடூழி!வாழியவே!

இன்பத் தமிழின் இறவாப் புகழோங்க
அன்பு மனம்தோய அறிஞராக்கிய இலக்கியத்தை!
கண்ணின் மணியாய் கருத்தின் திருவுருவாய்
எண்ணி மகிழ்ந்து எம்மினத்தின் துயர்போக்க
அள்ளி இறைத்தீர் அறிவுநூல் மூன்று
அத்தனையும் உங்கள் அறிவுக்கு சன்று..!

இலங்கையிலே அண்று தாத்தாவின் பள்ளியிலே
தங்கத்தமிழை பிள்ளைகளுக்கு சொல்லி பசிதீர்த்து..!
புலம்பெயர்ந்து வந்தும் பொதுப்பணியாய்த் தாணுணர்ந்து
பிள்ளைகள் காப்பகத்தில் பணி முடித்தீர்..!
அப்பணியின் உள்கொண்ட அனுபவத்தை புலம்பெயர்
தமிழ் சந்ததிக்கு நூலாக்கித் தான்கொடுத்தீர்
வாழிய வாழிய நின்பணி, புகழ் நீடூழிவாழியவே..!

நாடுநலம்பெறவும் நம்மக்கள் நல்லுறவு பேணிடவும்
வீடுகள் தோறெரியும் ஒளிவிளக்காய் பணிமுடித்து
காதலினால் பெற்ற கணவனின் துணைகோர்த்து
மக்கள் உள்ளமதைக் கொள்ளை கொண்டீர்
நெஞ்சமதை சீராக்கி தீந்தமிழுக்கு பணிமுடித்தீர்!
இதற்காக விழாவெடுத்து தமிழ்பாவால் மாலையிட்டு
வாழ்த்துகின்றார் நீர்வாழும் ஓகூஸ் ஊர்மக்கள்
வாழிய வாழிய நடூழி நின்பணிவாழியவே!

அழுத்தமும் கருவில் நல்லாழமும் நயமும்கொண்ட
கவிதைகள் அளிக்கவல்ல இனிய வேதநாயகாம்பாள்
பழந்தமிழ் இலக்கியங்கள் படித்தநல் கற்றோர்நெஞ்சை
இழுப்பவர் கவிதைமூலம் இவர்பணி நதியைப்போல..!
வர்ணங்கள் நேசிக்கும் இரசனை இவர்நெஞ்சம்
கலைநுணுக்கங்கள் கொண்டபல கைவண்ணங்கள் இவரின்சொந்தம்
வாசமலர் தான்கொண்ட தேனைப்போல கவிதாயினிவேதா
பல்லாண்டு பல்லாண்டு வாழிய நீடூழி வாழியவே!
நன்றி வணக்கம்

நன்றி உணர்வோடு வாழ்த்;துவோர்கள்
அன்புள்ளம் ஓகூஸ் தமிழர் ஒன்றியம்
ஓகூஸ் டென்மார்க்

my.vila.15.gray 291-ab

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-5-2015

line3

12 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. தி.தமிழ் இளங்கோ
    மே 08, 2015 @ 07:29:53

    // கோப்பாய் மண்ணை நீர்பிறந்த மண்ணாக்கி
    கும்பிட்ட கோயில் விட்டு, குடியிருந்த வீடுவிட்டு
    படித்த பள்ளிவிட்டு பக்கமிருந்த உறவுவிட்டு
    நாடுவிட்டு புலம்பெயர்ந்து. நாம,;அகதியானாலும்
    பெற்றதாயைப்போல் பேணிவளர்க்கின்றீர் எம்தாய் தமிழை!
    வாழிய! வாழிய! நின்பணி நீடூழி, நீடூழி!வாழியவே!//

    வாழ்த்துப் பாமாலையின் வரிகள் ஒவ்வொன்றும் அன்றைய துயரினையும் இன்றைய உங்கள் தமிழ் பற்றினையும் படம் பிடித்து காட்டுகின்றன. பாராட்டு மழையினில் நனைந்திட்ட சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  2. பிரபுவின்
    மே 08, 2015 @ 07:33:39

    நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.இறையாசி கிட்டட்டும்.
    அன்புடன் யாழ்ப்பாணத்திலிருந்து பிரபு.

    மறுமொழி

  3. Bagawanjee KA
    மே 08, 2015 @ 16:42:10

    உரியவரியிடம் சேர்ந்து விட்டோம் என்று பெருமைக் கொள்கிறது விருது ,வாழ்த்துகள்!

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    மே 09, 2015 @ 00:59:50

    வாழ்த்துகள் பல…

    மறுமொழி

  5. karanthaijayakumar
    மே 09, 2015 @ 02:49:07

    விருது
    பெருமை பெற்றிருக்கின்றது
    தங்களால்

    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    மறுமொழி

  6. முனைவர் ஜம்புலிங்கம்
    மே 09, 2015 @ 04:55:40

    மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது பணி.

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி