64. சில்லெனும் நீரே

11230665_987693664604226_4092811496928505606_n

*

சில்லெனும் நீரே

*

நீலவானக் கடல் பின்னணியில்

சாலம் காட்டும் நீரே!

ஆலங்கட்டியாய் விழுவாய்

அரிசிப் பொரியாய் விழுவாய்

ஆக்கினையான பனிக்கட்டி ஆவாய்!

ஆனந்த உணர்வு தரும்

ஆயாசம் உடலில் தீர்க்கும்

ஆனந்தத் துளியாய் இப்போது!

*

மெத்தென முகத்தில் விழுந்து

புத்துணர்வு தரும் துளியே!

எத்துணை தண்மை உன்

சத்தான திரவத்தின் அற்புதம்!

களைத்த முகத்திற்குப் புது

களிப்புத் தரும் அமிர்தம்!

பசியில் நல் அமுதமாவாய்

ருசிக்கும் சில்லெனும் நீரே!

*

பள பளக்கும் நல் நீரை

சள சளவென நன்கு அடித்து

சில் சில்லெனக் குளிர பாலர்

முகத்தில் தெளித்து நனைவார்

பகிரங்கமாய், பரவசமாய் மகிழ்வார்.

பச்சை மண் குழைத்து

பல வகைப் பணியாரம் செய்வார்.

சேற்றிலே நன்கு அளைந்தாடுவார்.

*

பா ஆக்கம்   பா வானதி

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  25-5-2015

*

samme   Katu………enkum,

https://kovaikkavi.wordpress.com/2015/05/23/379-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/

*

blue-border-603769

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜூன் 11, 2015 @ 01:44:17

  அருமை சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 11, 2015 @ 02:38:01

  பரவசப்பட்டேன்…

  அருமை…

  மறுமொழி

 3. கில்லர்ஜி
  ஜூன் 11, 2015 @ 03:46:37

  ஸூப்பர் சகோ….

  மறுமொழி

 4. yarlpavanan
  ஜூன் 13, 2015 @ 05:24:51

  தண்ணீரின் அருமை
  வெயில் வேளை தான்
  தெரியுமே!
  படமும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 14, 2015 @ 21:08:33

  மணியின் பாக்கள்:-
  சில்லென்று அடிக்கிறது நீர்துளி. மீயழகு
  June 10 -2015

  James Gnanenthiran :-
  அழகான குட்டிக்கவிதை ஒன்று தந்துள்ளீர் . பாராட்டுக்கள் .
  June 10
  Subajini Sriranjan:-
  சில் என்ற குளிர்மையான
  நீர் வேண்டும் இப்போ!
  June 10

  Vetha Langathilakam :-
  Dear mani, James, Suba..கருத்திடலிற்கு மிகுந்த மகிழ்வும் நன்றியும்.
  June 10

  Ratha Mariyaratnam :-
  Arumai sakothari
  June 10

  Vetha Langathilakam:- http://www.stsstudio.com/?p=9127

  பா வானதி வேதாவின் சில்லெனும் நீரே | stsstudio.com
  ஈழவர்கள் புலத்திலும் கலைவளர்ப்பது மிக மகிழ்ச்சி. அதுவும்…
  STSSTUDIO.COM
  June 12 at

  Vetha Langathilakam :-
  Mikka nanry.
  June 12

  Sujatha Anton :-
  சில்லென்று நம்மையும் சிலிர்த்திட வைத்த கவி அருமை.
  சிறுவர் இணைந்து சில்லிட்டு பாடும் போது
  மேலும் சில்லிடும். வாழ்க தமிழ்.!!

  Vetha Langathilakam:-
  makilchchy – nanry Sujatha.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: