492. மே தினம்…. மே தினம்

may -tst

*

2-4-2009ல் வார்ப்பு இணையத் தளத்தில் நான் எழுதிய கவிதை – புனை பெயர் கோவைக்கோதை
*

மே தினம்…. மே தினம்

*

உழைப்பின் ஊதியம் இளைத்தது.
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்.
களைப்பில் மனிதர் வளைந்தனர்.
சளைக்கவில்லை பலர் விழித்தனர்.
நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர்.
விளைந்தது போராட்டம் – குதித்தனர்.
*
சிக்காகோ, நியூயோர்க் பொஸ்டனீறாக
அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்.
நோக்கம் நிறைவேற போராட்டம்,
சிறை. உக்கிரமானது சர்வதேசப் புரட்சி.
உழைக்கும் நேரம் எட்டுமணியாக
உரிமையை போராடி வென்றனர்.
*
தொகுதியாய் கூட்டங்கள் உரிமைபேச
தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று.
எப்போதும் பணத்தில் குறியானவர்கள்,
தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள்,
எப்போது தானாகத் திருந்துவார்கள்,
அப்போதன்றோ பலருக்கு மே தினம்!
*
கோவைக்கோதை. ஸ்கன்டிநேவியன். 2-4-2009.
re publishing 30-4-2017
*

உழைப்பாளிகள் கருத்துடைய வேறொரு கவிதை

https://kovaikkothai.blogspot.com/2022/01/373-906.html

*
u.line

6 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கரந்தை ஜெயக்குமார்
    மே 01, 2017 @ 01:26:48

    மே தினம் போற்றுவோம்

    மறுமொழி

  2. Bagawanjee KA
    மே 01, 2017 @ 14:40:36

    #தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று.#
    அன்றைக்குத்தான் வை காசு என்று உரிமையாய் கேட்க முடியுமோ 🙂

    மறுமொழி

  3. Shavet Jain
    மே 12, 2017 @ 09:17:43

    தாய்மை என்பதோர் அழகிய பயணம். மிகக் கடினமானதும் கூட. சில அன்னையரின் தாய்மை அனுபவங்கள் நம் சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யும் உத்வேகத்தை அளிக்கும். சிலர் தங்கள் சுக துக்கங்களைக் கையாளும் வழிமுறைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. அன்னையர் தின சிறப்பாக Mycity4Kids கொண்டாடும் #Momspiration அத்தகைய தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.

    தன்னுடைய மன உறுதியாலும் வைராக்கியத்தாலும் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய அன்னையரைப் பற்றிய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. யார் கண்டது, நீங்களும் யாரோ ஒருவரை அதிசயிக்க வைத்திருக்கலாம்.. !!
    https://www.mycity4kids.com/parenting/article/momspiration-celebrating-mums-who-inspire
    Gift Sponsors- mycity4kids.com, VLCC and Himalaya BabyCare
    #Momspiration

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக