32. மொழி.

big_conch2-kl

 

மொழி.

மொழியொரு சமூகக் கருவி.
வாய்மொழிப் பாடல் பழமொழிகளென
படங்கு விரிப்பு ஏராளம்.
சடங்குப் பாடல்கள் பண்பாட்டின்
தடங்களில்லா அற்புதக் கையளிப்பு.

வாடலற்ற மொழியின் அழகியல்
ஆடல், நாடகம், இலக்கியம்
பாடல், பண்பாடு, அறிவு,
ஆன்மீகம், அனுபவ அலசல்கள்.
ஆதனம் தேசியம் கட்டியெழுப்ப.

தேசிய வரலாற்றுத் தொடர்பு
தேசிய முன்னேற்றம் உருவாக்கும்
ஆசி நிறைந்தது மொழி.
ஓசைகளினொரு வடிவம் மொழி
கருத்துப் பரிமாற்றச் சாதனம்.

உணர்வு சிந்தனைப் பரிமாற்ற
உருவிற்கு மொழி பாலம்.
நாகரிக நாகர்வின் கடையாணி.
சேகரிக்கவும் பண்பாட்டை அழிக்கவும்
மீகாமனாவது மொழிச் செங்கோல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-8-2014.

 

green line-2

80. கவிதை பாருங்கள்(photo,poem)

oldage

 

 

(வியோகம் - இறப்பு.
விகண்டை -மறுப்பு, பகைமை, தீய எண்ணம், உறுதி.)

(வளையாத வயோதிகம்(.photo poem)

வந்தது வந்தது வயோதிபம்
வழுகியது வழுகியது மென்னிதயம்
கன்றியது கன்றியது வக்கிரம்
நின்றது நன்றது பிடிவாதம்
வயோதிகத்தில் அன்பு பெருகும்,
அயோக்கியத்தனம் அழியுமென்பார்.
வியோகம் உறுதியானாலும் வன்னிதயத்தார்
விகண்டைப் போக்கு மாறாதது.)

கவனத்திற்கு:- வயோதிகர் அனைவரையுமல்ல
வன்னிதயத்தாரையே…/ வயோதிகர்களின் பிடிவாதம் அடம் பார்த்து ஊரில் கூறுவார்கள்
அறளை பத்திவிட்டது என்று.

Next…..

முகநூலில் எக்கச் சக்கமாக நட்பு வேண்டுகோள்.
எமது பக்கமே வராது நட்பாக விரும்புவர். இவைகளை எண்ணி…. எழுதியது.

karuththu

 

 

Big Blue Divider

79. கவிதை பாருங்கள்(photo,poem)

kuulaiththanam

பிழை. 

 

பிழைகள்

இவை பல கருத்துக்களில் வரும்.
தமிழில் பிழை.
நான் பெரிய புலவி அல்ல.
சாதரண விசிறிகள், அரவுகள் போடாவிடிலே கருத்துத் தலை கீழாக மாறிவிடும். இப்படி முகநூலில் யந்திரப் பிழையாக வருவது கூட தலைகீழாகிறது. இதை திருத்திக் கூறப் போனால் பலரிற்குத் தாங்க இயலுவது இல்லை.
நண்பனைக் கூறினால் பக்கத்து வீட்டுக்காரனே பொங்கி எழும் அநாகரீகம் எங்கும் நடக்கிறது. இப்படி வக்காலத்து வாங்கினால் அவர் தொடர்ந்து தனக்கு வந்து வாழ்த்தும் கருத்தும் போடவும் கூடும் யார் கண்டது!
வெறும் முகத்துதியும், நடிப்புமல்லவோ நடைபெறுகிறது.
சரி மீண்டும் திரும்புவோம்.
ஓற்றுப்பிழை – சந்திப் பிழை . எழுத்துப் பிழை – இலக்கணப் பிழை இப்படி ஒரு அவத்தையின் மனஎண்ணமே இது.
பிழைகள் என்று கூகிளில் எழுதுங்கள் நிறைய வரும் ரசனையாக, அறிவாகவும். வாசிக்கலாம்.

இது வேதா.
23-8-2014.

-gold-dividers

330. புற்றுநோயெனும்…….

anti-cancer-superfurits

புற்றுநோயெனும்…….

 

கற்றுணர்தவனை கல்லாதவனையும்
புற்றுநோயெனும் ஆட்கொல்லி நோய்
இற்றுப் போதலாய் வாழ்வின்
பற்றறுத்துப் பயமுறுத்தி வாட்டும்.
உற்ற உறவுகளின் கண்ணீர்
வற்றக் கலக்கிக் குளப்பும்.

அழுகிய வெங்காயம் அரிதலாய்
பழுதுடை பகுதிகள் அரியவரிய
தொழுது தொழுதுறவுகள் உயிர்
விழுது நிலைத்திடப் போராட்டம்.
அழுந்தும் வாழ்வெனு முண்மை
அழுத்திப் பதித்தால் ஆசையறும்.

பற்றற்ற வாழ்வையொரு மனசு
ஏற்றால் வாழ்வு சுகமாகும்.
ஆழ்ந்து ஊறி ஆசைகளில்
வீழ்ந்து புரண்டு தாழ்ந்து
தாழ்ப்பாளிட்டு முற்றாக மறக்கிறோம்
வாழ்வு சத்தியமான அநித்தியமென்று.

சொல்லாமல் நெருங்கும் துன்பம்
பொல்லாப் பயங்கர நோய்
அல்லல் தந்து அலைக்கழிக்கும்
வெல்ல முடியா மரணபயம்.
இல்லாதவனிற்கு இல்லாத துன்பம்
உள்ளோனிற்குப் பெருநோயே துன்பம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-8-2014

divisor_manos

78. கவிதை பாருங்கள்(photo,poem)

arivai adaku

 

அறிவை அடகுவைத்து

அற்புதமற்ற குறைவாழ்வு
கற்பனைக் கைத்தடியூன்றி 
நிற்பதில் சுகங்காணும்முயிர்
பொற்பதம் தேடும் தவித்து. 

தலைபுதைக்கும் தீக்கோழியாய்
நிலைகுலைந்து சீறும் நாகமாய்
விலையற்ற அறிவை அடகிட்டு
உலைக்களமாய்க் கொதித்தல் தாழ்வு.

944800_10153141148495704_1591081308_n

                                                     imagesCAPD2LKB

329. மாதிரிப் படவழகியே! (மாடல்)

untitled-3-copy

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

1. படத்திற்கு வரிகள்:-

மாதிரிப் படவழகியே! (மாடல்)

ஓரத்திலமர்ந்து ஒய்யாரம் காட்டும்
ஓவியமோவிது உயிரோவியமோ வென
ஓப்பனை ஏமாற்றும் உருவிது

திருவுருவான திருப்பாவையிவள்
திருமதியோ செல்வியோ ஒரு
திருமாங்கல்யமும் தென்படலையே!

பூக்கூடை கையேந்தி வாயிலிலே
பூத்திருக்கும் விழியழகி யாருக்கோ
பூரிக்கிறாளா காஞ்சிப் பட்டுடுத்தி!

நிழற்பட மாதிரி  இவளோ!
நிசக் காதலியோ! கருத்தாய்
நின்றிடும் தோரணை காதலனுக்காகவோ!

பூக்காரியும் இவளில்லை! ஏழைமைப்
பூஞ்சணமும் இவளில் இல்லை
பூஞ்சிட்டிவளொரு மாதிரிப் படவழகி.

பளபளக்கும் இவளுருப் போன்று
பளபளக்கும் பின்னணியும் இல்லை
வளவளப்பு ஏனிவள் மாதிரிப்படவழகியே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-8-2014

imagesCADKKMCK

399246_444298312289865_153065198_n

2. கவிதை – விருப்புத் தலைப்பு

விரைந்து வருவானோ!

மலர் மணம் சூழ் நந்தவனத்தில்
மகிழ் குளிர் குடைநிழற் கீழ்
மேகமிடு வில்லின் அழகின் கீழ்
தாகம் தணியச் சாரலில் நனைந்தேன்.

ஈரமுலர சந்திரனை ஏனோ காணேன்
ஈகையாளன் என்னவனையும் காணேன்
ஈரப்பற்றென் மேல் உலர்ந்ததோ அறியேன்.
ஈடுபாடு குறையாக் காதலோடு காத்துள்ளேன்.

மின்னல் கூறுவ தென்னவாயினு மவன்
இன்னலற்று வரும் பாதை காட்டட்டும்.
மின்னும் மூக்குத்தி நினைவு வந்துடன்
மின்னலாய் வந்திடானோ மிகச் சேதியறிய.

மலர் மணம் விரிக்கத் தன்
மனை நினைவு சிரிக்க இவன்
மலரேந்தி வருவானோ, இன்று என்
மனம் மகிழச் செய்வானோ விரைவாக.

நீளும் வாழ்வில் என்னைத் தமிழ்
ஆளும் திறன் போன்று மகிழ்
பெருக்கி  ஆள அவன் வரும்
தருணம் நெருங்கி வரட்டும். வரட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-8-2014

imagesCADKKMCK

77. கவிதை பாருங்கள்(photo,poem)

9130257-garlands-of-white-flowers-at-the-red-background-floral-vector-frame-oo

தேரார் – கல்லாதார்.
சீராளன் – சிறப்புப் பெற்றவன்
நேராளி – நேர்மையுடையவன்.
தாராளன் – உதார குணமுடையான்.
பேராளன் – பெருமையுடையவன்.

76209_711892718844758_276720426_nll

imagesCAPD2LKB

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.

Join 69 other followers