223. நாக்கு காக்க….

 

நாக்கு காக்க….

க்கும் மொழித் துடுப்பு
மூக்கின் கீழாம் நாக்கு – நா
காக்கும் வழியின்றிச் சிலர்
தாக்கும் சீக்கு வழியுடையார்.

ர் இனிய மொழியின்றி
ஒரு கூட்டுறவு ஏன்!
துருதுருத்து உழலும் நாக்கிற்கு
உருவாகாதோ தினம் களைப்பு!

ரு நிமிடத்துக் கிண்டல்கள்
ஒரு நாளின் சுடு சொற்கள்
பொருளற்ற கடுப்பு மொழிகள்
விருந்தோ! மருந்தோ! பயனெதுவோ!

கொலை! ஒரு நாக்கால்
தொலைவது பிறர் நிம்மதி!
நிலையின்றிச் சுழலும் நரம்பற்ற
விலையற்ற சுடுகலன் இது.

னிதப் பிறப்பு மகத்தானது
தொனிக்கும் மொழி உயர்வானது.
இனிக்கப் பேசி வாழ்வை
இதமாக வாசித்துச் சுகிப்போம்!

க்கியவன் நாக்கை எமக்கு
வைக்காவிடில் வாழ்க்கைப் போக்கின்
சூக்குமம் சிக்கல் பக்கமே.
காக்க நாவினைக் காக்கவே!


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-1-2012.

                                 

31 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. பழனிவேல்
    ஜன 10, 2012 @ 05:16:37

    “ஒரு நிமிடத்துக் கிண்டல்கள்
    ஒரு நாளின் சுடு சொற்கள்
    பொருளற்ற கடுப்பு மொழிகள்
    விருந்தோ! மருந்தோ! பயனெதுவோ!”

    அற்புதமான விளக்கம்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 06:05:57

      சகோதரா பழனிவேல் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் உமது அன்பன வருகைக்கும் கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. கோவை கவி
    ஜன 10, 2012 @ 05:58:32

    Hajira Banu likes this..

    Hajira Banu wrote:-
    மனிதப் பிறப்பு மகத்தானது….அற்புதம்

    Vetha wrote:-
    மிக்க நன்றி அன்புறவே. இறை அருள் கிட்டட்டும்.
    Hajira Banu wrote:-
    தங்கள் அன்பிற்கு நன்றி ….

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜன 10, 2012 @ 07:39:29

    Ravi TL wrote:-
    அருமை மேடம்
    vetha wrote:-
    மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உமது கருத்திற்கு. (இதை வலையில் இட்டால் இன்னும் மகிழ்வடைவேனே!) இறை ஆசி கிட்டட்டும்…..

    மறுமொழி

  4. வே.நடனசபாபதி
    ஜன 10, 2012 @ 09:20:16

    //”யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
    சொல்லிழுக்குப் பட்டு”//
    என்று சுருக்கமாக சொன்ன பொய்யாமொழிப் புலவனின் கருத்தை விரிவாக சொல்லி
    // இனிக்கப் பேசி வாழ்வை
    இதமாக வாசித்துச் சுகிப்போம்!//
    என்று நேர்மறையான கருத்தை தந்தமைக்கு நன்றிகள் பல!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 16:41:07

      மிக விரிவான கருத்தைத் தந்துள்ளீர்கள் சகோதரா.மிக மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி உரித்தாகுக. இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  5. Tharshi
    ஜன 10, 2012 @ 09:45:35

    ஒவ்வொருவரிகளும் அற்புதமாக உள்ளன
    மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் படைப்பு….

    மறுமொழி

  6. rathnavelnatarajan
    ஜன 10, 2012 @ 10:03:20

    இனிக்கப் பேசி வாழ்வை
    இதமாக வாசித்துச் சுகிப்போம்!

    அருமை.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 16:45:21

      ஐயா இனிக்கிறது உங்கள் வரவும், பின்னூட்டமும். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. b.ganesh
    ஜன 10, 2012 @ 11:25:37

    பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான், பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான் -இப்படி ஒரு பொன் மொழி படிச்ச நினைவு வருதுங்க வேதா. ஆறாத வடுவை உண்டாக்கிடும் படியான சொற்களை மறந்தும் பேசக் கூடாதுன்னு முடிவு பண்ணி, 99 சதவீதம் நடந்துட்டு வரேன். பேசின வார்த்தை காத்துல கலந்துட்டா திரும்ப வாங்கிட முடியாதில்ல… அருமையான வார்த்தைகள்ல நல்ல கருத்தை விதைச்சிருக்கீங்க. பிரமாதம். வாழ்த்துக்கள்!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 16:48:05

      அன்புச் சகோதரா மிக மகிழ்வடைந்தேன் உங்கள் வருகையால். உங்கள் விரிவான கருத்திற்கு மிக மிக நன்றி. உங்கள் தீர்மானம் வெற்றியடையட்டும். இறை ஆசி கிட்டட்டும்

      மறுமொழி

  8. jaghamani
    ஜன 10, 2012 @ 13:00:38

    ஆக்கியவன் நாக்கை எமக்கு
    வைக்காவிடில் வாழ்க்கைப் போக்கின்
    சூக்குமம் சிக்கல் பக்கமே.
    காக்க நாவினைக் காக்கவே!

    நாவின்
    ஒரு சொல் வெல்லும்
    ஒரு சொல் கொல்லும்..
    காக்க நாவினைக் காக்கவே!

    அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 16:51:19

      ”ஒரு சொல் வெல்லும்
      ஒரு சொல் கொல்லும்..
      காக்க நாவினைக் காக்கவே!”
      அருமை நல்ல வரிகள்…நீண்ட கருத்திற்கு மிக்க மிக்க மகிழ்வடைந்தேன்- நன்றி நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும் சகோதரி..

      மறுமொழி

  9. ramani
    ஜன 10, 2012 @ 13:44:37

    நாக்கு பேசிவிடும் பல் உடைபடும் என்பார்கள் கிராமத்தில்
    அதுபோல் தவறிப் பேசியவர்களின் வாழ்வு பல வகைகளில்
    சிதறிப் போனதை நாமறிவேன்
    அனைவரும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டிய
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 16:53:27

      அருமை நல்ல கருத்துடை வரிகள்… மிக்க மிக்க மகிழ்வடைந்தேன்- கருத்திற்கும், வருகைக்கும் மிக்க மிக்க நன்றி . ஆண்டவன் அருள் கிட்டட்டும் சகோதரா..

      மறுமொழி

  10. ரெவெரி
    ஜன 10, 2012 @ 17:28:30

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி…மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    மற்றுமொரு தரமான படைப்பு…

    வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 20:10:30

      ஆமாம் எனக்கும் சநதோசம் ..மிஸ் பண்ணினதாக இருந்தது. கடவுளிற்கு நன்றி. தங்கள் வரவு மிக மகிழ்வுடைத்து. நன்றி..நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  11. SUJATHA
    ஜன 10, 2012 @ 19:25:47

    நாக்கு காக்க…… கவிதையில் இப்படி ஒரு சிந்தனை உங்களை
    தூண்டிவிட்டதில் எம்மையும் சிந்திக்கவைத்துவிட்டது.” நாவினால் சுட்டவடு” மாறாது. நாமே பாதுகாக்க வேண்டும்…..அருமையாக கவிவரிகள் சொல்லிக்கொடுக்கின்றது.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 10, 2012 @ 20:12:58

      ஏதோ மன உணர்வில் தான் இவ் வரிகள் வந்தது. நினைவில் இல்லை எப்படி என்று. அமைந்து விட்டது. கருத்திற்கு மகிழ்வும், நன்றியும் சுஜாதா. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. மகேந்திரன்
    ஜன 11, 2012 @ 08:57:14

    எதைக்காக்க மறந்தாலும்
    நாவன்மை காக்க வேண்டும்..
    சபையினில் நம் நிலையை
    உணர்த்த வல்ல நாவன்மை
    காத்திடலின் அவசியத்தை
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 11, 2012 @ 17:36:56

      மிக்க நன்றி மகேந்திரன். உமது இனிய வருகை, கருத்திடலிற்கு மிக மனம் மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றி. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  13. பிரபுவின்
    ஜன 11, 2012 @ 09:15:57

    அருமையான பதிவு.விளக்கம் மிகவும் நன்றாக இருக்கின்றது.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 11, 2012 @ 17:38:03

      பிரபு மிக்க நன்றி . உமது இனிய வருகை, கருத்திடலிற்கு மிக மனம் மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  14. Madhu Mathi
    ஜன 12, 2012 @ 03:15:09

    தாங்கள் சொன்னது போல நாவடக்கம் என்பது மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று..
    ஒரு நிமிடத்துக் கிண்டல்கள்
    ஒரு நாளின் சுடு சொற்கள்
    பொருளற்ற கடுப்பு மொழிகள்
    விருந்தோ! மருந்தோ! பயனெதுவோ!
    சரிதான் அதனால் ஒரு பயனும் இல்லை..
    வாழ்த்துகள் சகோ..

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 12, 2012 @ 07:25:38

      மிக்க நன்றி சகோதரா. உமது இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும், மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்

      மறுமொழி

  15. Madhu Mathi
    ஜன 12, 2012 @ 03:15:58

    அன்போடு அழைக்கிறேன்..
    தீண்ட மறுக்கிறார் காந்தி

    மறுமொழி

  16. கலைநிலா
    ஜன 12, 2012 @ 10:59:43

    கொலை! ஒரு நாக்கால்
    தொலைவது பிறர் நிம்மதி!
    நிலையின்றிச் சுழலும் நரம்பற்ற
    விலையற்ற சுடுகலன் இது.

    உண்மையான வரிகள்…
    உருக்குலைக்கும்
    உறவுகளை தடுக்கும்
    ஆயுதம் நாக்கு…
    பாராட்டுக்கள் சகோதரியே…

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 12, 2012 @ 21:17:04

      மிக்க நன்றி சகோதரா. உமது இனிய வருகை, கருத்து இனிமை தந்தது. மிக்க மிக்க நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  17. பி.அமல்ராஜ்
    ஜன 13, 2012 @ 07:58:08

    அருமையான கவிதை.. வரிகள் அத்தனையும் பிரமாதம்.. வாழ்த்துக்கள் அக்கா..

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 13, 2012 @ 17:21:58

      சகோதரா! அமல்ராஜ்! உங்களுக்கும் எ’ங்கள் பொங்கல் வாழ்த்துகள். மிக்க நன்றி சகோதரா உங்கள் கருத்திடலிற்கும், வருகைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

Madhu Mathi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி